.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை
Monday, 04.06.2018, 03:11pm (GMT)

ஹவாய் தீவுகள் மற்றும் தென் கலிபோர்னியா கடற்பகுதிகளில் நடைபெறவுள்ள உலகின் மிகப் பெரிய அனைத்துலக கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா கடற்படை நேற்று அறிவித்துள்ளது.

RIMPAC -2018 எனப்படும், பசுபிக் விளிம்பு ஒத்திகையிலேயே சிறிலங்கா கடற்படை முதல் முறையாகப் பங்கேற்கவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 27ஆம் நாள் ஆரம்பித்து, ஓகஸ்ட் 2ஆம் நாள் முடிவடையும்.

இந்தக் கூட்டுப் பயிற்சியில், 47 போர்க்கப்பல்கள், 5 நீர்மூழ்கி கப்பல்கள், 18 தேசிய தரை படைகள், 200இற்கும் அதிகமான விமானங்களுடன், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர் என்று அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடம் தெரிவித்துள்ளது.

1971ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, RIMPAC கூட்டுப் பயிற்சி,  இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இம்முறை நடக்கவுள்ளது 26 ஆவது கூட்டுப் பயிற்சியாகும்.

“ஆற்றல், தகவமைப்பு, பங்காளர்கள்” என்ற தொனிப்பொருளில் இம்முறை கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சியில், சிறிலங்கா, வியட்னாம், இஸ்ரேல், பிரேசில் ஆகிய நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்கின்றன.

மேலும், அவுஸ்ரேலியா, புரூணை, கனடா, சிலி, கம்போடியா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பெரு, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, டொங்கா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.

அதேவேளை, சிறிலங்கா தரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும் போர்க்கப்பல் தொடர்பான எந்த தகவலும் இன்னமும் வெளியிடப்படவில்லை.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
புதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்! (03.06.2018)
வடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்!-அநுராதா மிட்டால் (07.05.2018)
மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு! (07.05.2018)
இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! (03.05.2018)
ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு! (02.05.2018)
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை!  (14.04.2018)
விடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள், (14.04.2018)
28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி! (13.04.2018)
அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்!-வி.எஸ்.சிவகரன் (13.04.2018)
அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போராடடத்தில் தமிழ் அரசியல் கைதி! (12.04.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan