.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்!
Sunday, 17.06.2018, 08:33pm (GMT)

மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மற்றொரு நாட்டிற்கு செல்ல முயன்று, மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மரணமடைந்த இலங்கை அகதி விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜூட் மயூரன் சில தினங்களுக்கு முன் மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சாவடைந்துள்ளார்.

இவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும், அதுவே இவரது சாவுக்குக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த நபர் 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே மலேசியாவிற்கு சென்று தஞ்சம் கோரியவராவார். இவரைப் போன்று 3000-க்கும் அதிகமான அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

சாவடைந்த ஜூட் மயூரன் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப் பகுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து செயற்பட்டுள்ளதாக தெரியவருகிறது, அதேவேளை இவரின் மரணம் தொடர்பில் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளது.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது! (05.06.2018)
உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)
புதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்! (03.06.2018)
வடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்!-அநுராதா மிட்டால் (07.05.2018)
மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு! (07.05.2018)
இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! (03.05.2018)
ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு! (02.05.2018)
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை!  (14.04.2018)
விடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள், (14.04.2018)
28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி! (13.04.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan