.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன
Thursday, 21.06.2018, 03:10pm (GMT)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, சிறிலங்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்.. ”ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு, இன்னமும் காலம் உள்ளது. இது ஆரம்ப நிலை தான்.

இப்போது தான் அமெரிக்கா வெளியேறியிருக்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், சிறிலங்காவுக்கு சாதகமான நிலைமையாக இருக்கக் கூடும். அழுத்தங்கள் குறையக் கூடும். நிலைமைகள் வேறுமாதிரியாக இருக்கும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானங்களை முன்வைக்கும் முயற்சிகளை அமெரிக்கா தான் ஆரம்பித்தது. எனவே, சிறிலங்கா தொடர்பான நல்லதொரு அனைத்துலக நிலைப்பாட்டை நாம் எதிர்பார்க்க முடியும்.

அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக முதலாவது தீர்மானம், அமெரிக்காவின் ஆதரவுடன் தான் கொண்டு வரப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.

அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. அனைத்துலக சமூகத்துக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத நிலையில் தான், மீண்டும் இரண்டு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

எனவே, ஐ.நா பிரகடனங்களில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக கையெழுத்திட்டுள்ள சிறிலங்கா, மூன்று ஜெனிவா தீர்மானங்களையும் மதிக்கக் கடமைப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்! (17.06.2018)
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது! (05.06.2018)
உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)
புதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்! (03.06.2018)
வடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்!-அநுராதா மிட்டால் (07.05.2018)
மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு! (07.05.2018)
இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! (03.05.2018)
ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு! (02.05.2018)
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை!  (14.04.2018)
விடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள், (14.04.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan