.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
யாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்! 
Friday, 22.06.2018, 01:41pm (GMT)

வலி.வடக்கில் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் பகுதிகளை தவிர 2500 ஏக்கர் நிலப்பகுதி இராணுவத்தினர் வசமுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் திரு.எஸ்.சுகிர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
   
'வலிகாமம் வடக்கில் 6300 ஏக்கர் நிலப்பகுதியானது உயர் பாதுகாப்பு வலையமாக இருந்தது. தற்போது 3300 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3000 ஏக்கர் காணியில் குறிப்பிட்டளவு பலாலி விமான நிலையத்திற்கும் , காங்கேசன்துறை துறைமுகத்திற்குமான நிலப்பகுதிகளை விட 2500 ஏக்கர் நிலப்பகுதிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.

வலிகாமம் வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாதுள்ளது. குறிப்பாக மயிலிட்டித்துறை வடக்கு, பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, ஆகிய கிராம சேவையாளர்கள் பிரிவுகளே முழுமையாக விடுவிக்கப்படாதுள்ளன. இதேவேளை 18 கிராம அலுவலர் பிரிவுகள் பகுதி அளவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.

மேலும் காங்கேசன்துறையில் 515 ஆவது பிரிகேட் தலைமையகம் விடுவிக்கப்படுமேயானால் காங்கேசன்துறை நகர் முழுமையாக விடுவிக்கப்பட்டு விடும். இவ்வாறு விடுவிக்கப்படுமானால் மக்கள் மீள் குடியேற்றப்பட்டு நிலைபேறான அபிவிருத்தியை காங்கேசன் துறை நகர் அடைந்து விடுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன (21.06.2018)
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்! (17.06.2018)
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது! (05.06.2018)
உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)
புதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்! (03.06.2018)
வடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்!-அநுராதா மிட்டால் (07.05.2018)
மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு! (07.05.2018)
இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு! (03.05.2018)
ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு! (02.05.2018)
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி கனடிய நாடாளுமன்றில் பிரேரணை!  (14.04.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan