.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைக் கைதிகள் அடையாள உண்ணா விரதம்
Wednesday, 19.09.2018, 09:12am (GMT)

மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அநுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளே இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சென்று பார்வையிட்டிருந்தார்.

அவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தி இரண்டொரு நாளில் சாதகமான பதிலை தருவதாக கைதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

அண்மையில் சிறை கைதிகளை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இந்த விடயத்தை ஜனாபதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

அவரின் வாக்குறுதியை நம்பி தமக்கு சாதகமான பதில்வரும் என்ற நம்பிக்கையுடன் அரசியல் இன்று ஆறாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!  (22.06.2018)
இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை! (22.06.2018)
யாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்!  (22.06.2018)
அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன (21.06.2018)
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்! (17.06.2018)
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது! (05.06.2018)
உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)
புதிய கட்சி தேவையில்லை புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்! (03.06.2018)
வடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் விரைவில் கைப்பற்றுவார்கள்!-அநுராதா மிட்டால் (07.05.2018)
மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு! (07.05.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan