.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
ஐ.நா.வின் தீர்மானத்தை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவை ஆதரிப்போம்.-த.தே.கூ!
Sunday, 28.10.2018, 08:39pm (GMT)

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்கள்  இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் செயற்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் கூட்டமைப்பு முன்வைப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், சிறுபான்மை கட்சிகள் தமது ஆதரவு குறித்து படிப்படியாக வெளிப்படுத்தி வருகின்றன.

இதேவேளை, இலங்கையில் இறுதி யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் ஆதரவு வழங்கியது.

எனினும், அதனை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் வகையில் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறி முறையை அமுல்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானது- மிக கவனமாக இருக்குமாறு தமிழர்களுக்கு விக்கி வேண்டுகோள்! (23.10.2018)
அரசியல் கைதிகளை விடுவிக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்!- உறவினர்கள் கோரிக்கை (20.09.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைக் கைதிகள் அடையாள உண்ணா விரதம் (19.09.2018)
"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!  (22.06.2018)
இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை! (22.06.2018)
யாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்!  (22.06.2018)
அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன (21.06.2018)
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்! (17.06.2018)
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது! (05.06.2018)
உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை (04.06.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan