.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
மைத்திரிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?- ஐ.தே.க! 
Sunday, 28.10.2018, 09:35pm (GMT)

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளில், ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்ரம சிங்கவை முறையற்ற வகையில் பதவிநீக்கம் செய்து, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கை ஐதேகவுக்கு கடும், சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக நிறுத்தி மைத்திரிபால சிறிசேனவை அதிபராக்கியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அவர் நாட்டு மக்களுக்கும், ஐதேகவுக்கும் துரோகம் இழைத்து விட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

மங்கள சமரவீரவும் இதே கருத்தை வெளியிட்டதுடன், ஜனாதிபதிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது தொடர்பாக நேற்று ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து, பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கான யோசனைகள் கிடைத்துள்ளன. இப்போது நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றே கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஐ.நா.வின் தீர்மானத்தை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவை ஆதரிப்போம்.-த.தே.கூ! (28.10.2018)
இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானது- மிக கவனமாக இருக்குமாறு தமிழர்களுக்கு விக்கி வேண்டுகோள்! (23.10.2018)
அரசியல் கைதிகளை விடுவிக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்!- உறவினர்கள் கோரிக்கை (20.09.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைக் கைதிகள் அடையாள உண்ணா விரதம் (19.09.2018)
"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!  (22.06.2018)
இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை! (22.06.2018)
யாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்!  (22.06.2018)
அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன (21.06.2018)
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மலேசியா சிறையில் சாவடைந்துள்ளார்! (17.06.2018)
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது! (05.06.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan