.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
கொழும்பில் அதிரடி திருப்பம்! மைத்திரிக்கு எதிராக 126 உறுப்பினர்கள்!
Tuesday, 30.10.2018, 10:21am (GMT)

நாடாளு மன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இது தொடர்பான கடிதம் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் கூடிய விரைவில் நாடாளு மன்றத்தை கூட்டி, அரசியல் அமைப்பிற்கமைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு நாடாளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதால், நாடாளு மன்றத்தை கூட்டும் அதிகாரத்தை சபாநாயகர் பெற்றிருக்கிறார். இதனையடுத்து அடுத்து வரும் நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதித்திருந்தார். பிரதமராக பதவியேற்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் உறுப்பினர்களை திரட்டுவதற்காக இந்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
 
இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி, உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது. இதன் போது பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கான பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை சபாநாயகர் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்து நாட்டின் சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் அரசு உரிமையை பாதுகாக்குமாறு நாட்டின் பிரதமராக தான் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக் கொள்வதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறீலங்காவிற்கு ஐ.நா கோரிக்கை! (29.10.2018)
மைத்திரிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?- ஐ.தே.க!  (28.10.2018)
ஐ.நா.வின் தீர்மானத்தை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவை ஆதரிப்போம்.-த.தே.கூ! (28.10.2018)
இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானது- மிக கவனமாக இருக்குமாறு தமிழர்களுக்கு விக்கி வேண்டுகோள்! (23.10.2018)
அரசியல் கைதிகளை விடுவிக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்!- உறவினர்கள் கோரிக்கை (20.09.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைக் கைதிகள் அடையாள உண்ணா விரதம் (19.09.2018)
"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!  (22.06.2018)
இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை! (22.06.2018)
யாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்!  (22.06.2018)
அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகமே - ராஜித சேனாரத்ன (21.06.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan