.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
சிங்கள அரசியல் தலைமைகளின் தவறுகளாலேயே பிரபாகரன் பயங்கரவாதி ஆக்கப்பட்டார்: மு.முரளிதரன்
Thursday, 08.11.2018, 09:32am (GMT)

சிங்கள அரசியல் தலைவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் முழு நாட்டையும் பாதித்தது, அவ்வாறான சூழலிலேயே பிரபாகரன் அவர்கள்  பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார். ஜனநாயகம், உரிமைகள் சட்டம் என்பன இரண்டாவது, நாட்டு மக்களுக்கு மூன்று வேளை தேவையான உணவு, பிள்ளைகளுக்கான கல்வி என்பனவே முதன்மையானது என இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றின் சிங்களச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், தெரிவைக்கையில்…

பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் அண்மையில் 9 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார், ஆனால் வடக்கு சார் அரசியல்வாதிகள் யாரும் அதனை கவனத்திற்கொள்ளவில்லை.

கடந்த காலங்களில் நாட்டில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன, தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு தரப்பினரிடத்திலும் தவறுகள் உள்ளன. பெரும்பான்மையின மக்கள் முழுதும் தவறிழைத்தார்கள் என நான் கூறவில்லை, அவர்களுள் 5 சதவீதமானவர்கள் அரசியல் சூழலை சாதகமாக்கிக்கொண்டு தவறிழைத்தார்கள்.

சிங்கள அரசியல் தலைவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் முழு நாட்டையும் பாதித்தது, அவ்வாறான சூழலிலேயே பிரபாகரன் அவர்கள்  பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
கொழும்பில் அதிரடி திருப்பம்! மைத்திரிக்கு எதிராக 126 உறுப்பினர்கள்! (30.10.2018)
அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறீலங்காவிற்கு ஐ.நா கோரிக்கை! (29.10.2018)
மைத்திரிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?- ஐ.தே.க!  (28.10.2018)
ஐ.நா.வின் தீர்மானத்தை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவை ஆதரிப்போம்.-த.தே.கூ! (28.10.2018)
இனிவரும் காலங்கள் மிகவும் ஆபத்தானது- மிக கவனமாக இருக்குமாறு தமிழர்களுக்கு விக்கி வேண்டுகோள்! (23.10.2018)
அரசியல் கைதிகளை விடுவிக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்!- உறவினர்கள் கோரிக்கை (20.09.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைக் கைதிகள் அடையாள உண்ணா விரதம் (19.09.2018)
"தமிழீழ தேசிய மிருகம்" சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!  (22.06.2018)
இலங்கைக்குள் நுளைய 100 தமிழர்களுக்குத் தடை! (22.06.2018)
யாழ் வலி. வடக்கில் இராணுவத்தின் வசம் 2500 ஏக்கர் காணிகள்!  (22.06.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan