.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
பிரதான அறிக்கைகள்!
 
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் - வ.சிவரதன்
Saturday, 10.11.2018, 01:44am

"இலங்கையின் ஆட்சி அமைப்பும் சட்டங்களும் என்றுமே எமக்கு எதுவும் தரப்போவதில்லை என்பதை உணர்த்த கூடியதாகவும், எமது உரிமைகைகளுக்காவும் ஒரு மக்கள் போராட்டம் செய்ய வேண்டிய நேரம் இது. என வ .சிவராதன் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை
Friday, 15.06.2018, 09:39am
கடினமான சுமைகளுக்குள் நின்றபோதும், இலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் சுவிஸ் நாட்டின் சட்ட ஒழுங்குகளை மதித்து எமது தாயகத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். என தமிழீழ விடுதலைப் புலிகளின், சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழுமையான வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.
மாமனிதர் குணாளன் மாஸ்ரர்- தமிழீழ விடுதலைப் புலிகள் 
Tuesday, 10.04.2018, 11:57pm
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றிய திரு.குணாளன் மாஸ்ற்ரர் அவர்கள்  சுகவீனம் காரணமாக 29-03-2018 அன்று சாவடைந்துள்ளார். அவரின் இழப்பு எமது விடுதலை போராட்ட வரலாற்றின் பேரிழப்பாகும். அவரின் சேவையை கருத்தில் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அவரை மாமனிதராக மதிப்பளித்துள்ளதுடன், ஊடக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கண்ணீரில் வரையும் கருணை மனு விண்ணப்பம்!
Monday, 19.03.2018, 10:17pm
சகல இலங்கை மக்களும் இன, மத, பிரதேச, மொழி, வேறுபாடுகளுக்கு அப்பால் இக்கருணை மனு தொடர்பாக மனிதாபிமானத்துடன் தாமாக முன்வந்து சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனுக்கு மேதகு ஜனாதிபதி அவர்கள் உடனடியாகவே பொது மன்னிப்பை வழங்கி அநாதரவாகியுள்ள இரு குழந்தைகளின் எதிர்கால நலன்களைக் கருத்திற் கொண்டு இவரை விடுதலை செய்யும்படி தமது கருத்துக்களையும், விருப்பங்களையும் இப்பதிவில் தயவாக வெளிப்படுத்தி மேதகு ஜனாதிபதி அவர்களின் கவனத்தை ஈர்க்குமாறு மிகவும் வினயமாகவும் வேண்டிக் கொள்கின்றேன்.
நான் ஒன்றும் கருவாட்டுக்கடையில் கற்பூரம் விற்பவன் இல்லை-தமிழரசுக்கு சிவகரன் கடிதம்
Saturday, 03.03.2018, 01:44pm
உட்கட்சி சனநாயகத்திற்கு சாவுமணி அடித்து விட்டு அரசியல் அறத்திற்கு மரண தண்டனை கொடுத்து விட்டு கண்ணாடிக் கூண்டில் இருந்து கல்லெறிய வேண்டாம். நான் ஒன்றும் கருவாட்டுக்கடையில் கற்பூரம் விற்பவன் இல்லை. தழிழ்த் தேசியம் எனும் ஆணி வேரில் இரு ந்து அரும்பியவன். எனக்கு இலவச விளம்பரம் பெற்றுத்தந்தமைக்கு மிக்க நன்றிகள் என சனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.ஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் உருவாகிறது தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் அணி!
Thursday, 01.03.2018, 11:36pm
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இளைஞர் அணிகளை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பேரவையூடாக போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது. அதன் பொருட்டு எம்மிடையே போதிய கரிசனை எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைப்பாளருமான சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் அமைகிறது ஐநாவுக்கான தமிழீழ தூதராலயம்!
Monday, 26.02.2018, 09:50am
"தமிழர் இயக்கம்" ஆகிய நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமைந்துள்ள யெனீவா மாநிலத்தில் தமிழீழத்தினை பிரதிபலிக்கும் வகையில் " "தமிழீழத்தின் நிரந்தர தூதராலயத்தை" அமைத்துச் செயற்படுத்தி வருகிறோம். எமது தமிழீழ அரசும்,
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழின நன்மைக்காக ஒன்றுபடுங்கள்-கம்பன் கழகம் கோரிக்கை!
Wednesday, 14.02.2018, 02:49pm
இந்நாட்டில் அமையப் போகும் ஆட்சி இனப்பிரச்சினை தீர்வுக்குச் சார்பானதாக இருக்காது என்பதை, நிச்சயப்படுத்தலாம் போல் தெரிகிறது. அங்ஙனம் அமையு மாயின் தமிழினத்திற்கான தீர்வுத்திட்டம் என்பது, வெறுங் கனவாகத்தான் அமையும் என்பதில் ஐயமில்லை. தமிழினம் நோக்கி சுனாமியாய்த் திரும்பியிருக்கும் இவ் ஆபத்தை அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தலைவர்களாகிய நீங்கள் நிச்சயம் எங்களை விட நன்கு அறிவீர்கள் என நாம் நம்புகிறோம்.

தமிழீழ மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன அறிக்கை,2017 தமிழீழ விடுதலைப் புலிகள்.


Monday, 27.11.2017, 06:48pm

முள்ளிவாய்க்கால் பேரழிவின்பின்னர் ஏற்பட்ட சூழ்நிலையைச் சாதகமாக்கி தாங்கள் விரும்புகின்ற ஒரு நிர்வாகக் கட்டமைப்பை அரசியல் தீர்வாகக் காட்டி தமிழ்மக்களின் தலையில் கட்டிவிட சிங்கள அரசு முயற்சிக்கின்றது. இதற்கு பன்னாட்டுச் சமூகமும் தமிழ்த்தலைவர்கள் சிலரும் உடன்போய்க் கொண்டிருக்கிறார்கள்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 2008, மாவீரர் நாளில் நிகழ்த்திய கொள்கைப்பிரகடன உரை மீள் பிரசுரம்.
Monday, 27.11.2017, 07:52am

காலத்தின் தேவை கருதி தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 2008, மாவீரர் நாளில் நிகழ்த்திய கொள்கைப்பிரகடன உரை மீள் பிரசுரம்.
இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக. 

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 2008, ஆம் ஆண்டு மாவீரர் நாளில் நிகழ்த்திய கொள்கைப்பிரகடன உரை, காணொளியிலும், எழுத்து வடிவிலும் இனைக்கப்படுள்ளது .
முத்துக்குமாரும் முடிவல்ல; முள்ளிவாய்க்காலும் முடிவல்ல; ஆரம்பமே!! செந்தமிழன் சீமான்
Wednesday, 29.01.2014, 11:10am

வெறி பிடித்த சிங்கள அரசு நிகழ்த்திய ஈழப் படுகொலைகளையும் இனவெறிக் கொடூரங்களையும் உலகமே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த நிலையில், ஈழத் துயரங்களைத் தடுக்கக் கோரி ரத்தமும் சதையுமான தனது உடலை தீக்குத் தின்னக் கொடுத்துப் போராடியவன் தம்பி கொலுவைநல்லூர் கு.முத்துக்குமார்.

  » இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே! – மக்கள் தீர்ப்பாயம்
  » விதையாய் வீழ்ந்த நம் வீரர்களின் நினைவோடு விடுதலைக்காக செயலாற்ற உறுதி கொள்வோம்-பிரதமர்
  » ஆறு அறிவுபடைத்த ஊடக மனிதர்களிடம் இசைப்பிரியாவின் சகோதரி விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!
  » நாம் கூட்டுப் பங்காளிகளே தவிர, குத்தகைக்காரர்களல்ல - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்
  » மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன்
  » தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்- தமிழீழ அரசியல்த் துறை
  » புரட்சியும்,எழுச்சியும் மாணவ சமுதாயத்திடமிருந்தே தோற்றம் பெறுகின்றது -தேசியத் தலைவர்
  » எமக்கான விடுதலை ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும். அதுவரை ஓய்ந்துவிடாமல் போராடுவோம்
  » தமிழீழ சுதந்திர சாசன வரைபு எமது விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்
  » தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு ஒரு வரலாற்றுக் கடமை. விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி: 
::| Latest News
::| Events
November 2018  
Su Mo Tu We Th Fr Sa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30  
 
 

Site Created By: Thiliepan