.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான அறிக்கைகள்!
 
ஜெனிவாவில் அமைகிறது ஐநாவுக்கான தமிழீழ தூதராலயம்!
Monday, 26.02.2018, 09:50am (GMT)சுதந்திர போராட்ட இயக்கங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வரைபுகள், விதிமுறைகளுக்கு அமைவாக சர்வதேச அழுத்தங்களின் காரணமாக, 2002,ஆம் ஆண்டு  பேச்சுவார்த்தை ஒப்பந்தந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் கைச்சாத்திட்டதன் அடிப்படையில் 2009 மே மாதம் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதங்களை மௌனித்ததன் காரணமாக நாம்  போரில் பின்னடைவிற்கு உள்ளானதன் நிலையில், நாம் நிறுவி நிர்வகித்த இறைமையுடைய தமிழீழ அரசை கைவிட்டோம் அல்லது கைவிடவேண்டும் என்று பொருட்படாது. என சுவிஸ் நாட்டை தலைமையகமாகக் கொண்டியங்கும் தமிழர் இயக்கம் விடுத்துள்ள தகவல் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அவர்கள் விடுத்துள்ள குறுந்தகவல் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

மதிப்பிற்குரிய உறவுகளே!

"தமிழர் இயக்கம்" ஆகிய நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமைந்துள்ள யெனீவா மாநிலத்தில் தமிழீழத்தினை பிரதிபலிக்கும் வகையில் " "தமிழீழத்தின் நிரந்தர தூதராலயத்தை" அமைத்துச் செயற்படுத்தி வருகிறோம். எமது தமிழீழ அரசும், அதன் எண்ணக்கருவும் தமிழர் வாழும், தமிழ் ஆற்றும் மூலை முடுக்கெங்கும் பரந்து கிடக்கிறது. எண்ணத்தில் உறங்கும் எமது அரச கட்டுமானத்தை உயிர்ப்புற வைத்து தமிழீழ நிழல் இயங்கியல் அரசை அமைத்து தமிழீழம் நோக்கிப் பயணிப்பதே எமது நோக்கம்.

தமிழீழ நிலப்பரப்பானது இன்று சிறிலங்கா  இனவாத அரசினால் முற்று முழுதாக  ஆக்கிரமிக்கப்பட்டு, எமது தமிழீழ நடைமுறை அரசின் கட்டுமானங்கள் அழிக்கப்பட்டுள்ள போதும், நாம் எமது உரிமைப் போராட்டத்தினைக் கைவிடவில்லை. கைவிடப்போவதும் இல்லை. தமிழீழம் என்ற நாட்டினையும், அதன் அரச கட்டுமானங்களையும் நாம் நடைமுறைப்படுத்தியவர்கள். எமது தனித்த இறையாண்மையை நிர்வகித்தவர்கள். அவற்றை ஏற்றுக்கொண்டே சர்வதேசமும், சிறீலங்கா அரசும் எம்முடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். 

சுதந்திர போராட்ட இயக்கங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வரைபுகள், விதிமுறைகளுக்கு அமைவாக சர்வதேச அழுத்தங்களின் காரணமாக, 2002,ஆம் ஆண்டு  பேச்சுவார்த்தை ஒப்பந்தந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் கைச்சாத்திட்டதன் அடிப்படையில் 2009 மே மாதம் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதங்களை மௌனித்ததன் காரணமாக, நாம்  போரில் பின்னடைவிற்கு உள்ளானதன் நிலையில், நாம் நிறுவி நிர்வகித்த இறைமையுடைய தமிழீழ அரசை கைவிட்டோம், அல்லது கைவிடவேண்டும் என்று பொருட்படாது.

எமது தமிழீழ அரசும், அதன் எண்ணக்கருவும் தமிழர் வாழும், தமிழ் ஆற்றும் மூலை முடுக்கெங்கும் பரந்து கிடக்கிறது. எண்ணத்தில் உறங்கும் எமது அரச கட்டுமானத்தை உயிர்ப்புற வைத்து தமிழீழ நிழல் இயங்கியல் அரசை அமைத்து தமிழீழம் நோக்கிப் பயணிப்பதே எமது நோக்கம்.

அவ் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமே தமிழீழத் தூதராலயங்களை அமைக்கும் இம் முயற்சி ஆகும். யெனீவாவில் அமைந்துள்ள எமது தூதராலயத்தை நாம் கொண்டு நடத்த மாதம் 1500 CHF  தேவை. வாடகை: 650 CHF, ஏனைய அலுவலகச் செலவுக்கள்: 850 CHF.

இவ் வரலாற்றுத் தேவையை முன்னெடுக்க மக்களாகிய உங்களிடத்திலிருந்து பொருளாதார உதவிகளை உரிமையுடன் எதிர்பார்த்து நிற்கிறோம். உதவி புரிய விரும்புபவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

பொருளாதார உதவிகளை இணைப்பில் உள்ள எமது இயக்கத்தின் வங்கிக்கணக்கில் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழர் இயக்கம்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழின நன்மைக்காக ஒன்றுபடுங்கள்-கம்பன் கழகம் கோரிக்கை! (14.02.2018)
தமிழீழ மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன அறிக்கை,2017 தமிழீழ விடுதலைப் புலிகள். (27.11.2017)
முத்துக்குமாரும் முடிவல்ல; முள்ளிவாய்க்காலும் முடிவல்ல; ஆரம்பமே!! செந்தமிழன் சீமான் (29.01.2014)
இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே! – மக்கள் தீர்ப்பாயம் (17.12.2013)
விதையாய் வீழ்ந்த நம் வீரர்களின் நினைவோடு விடுதலைக்காக செயலாற்ற உறுதி கொள்வோம்-பிரதமர் (28.11.2013)
ஆறு அறிவுபடைத்த ஊடக மனிதர்களிடம் இசைப்பிரியாவின் சகோதரி விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்! (09.11.2013)
நாம் கூட்டுப் பங்காளிகளே தவிர, குத்தகைக்காரர்களல்ல - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் (26.10.2013)
மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன் (23.10.2013)
தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்- தமிழீழ அரசியல்த் துறை (20.09.2013)
புரட்சியும்,எழுச்சியும் மாணவ சமுதாயத்திடமிருந்தே தோற்றம் பெறுகின்றது -தேசியத் தலைவர் (06.06.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan