.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான அறிக்கைகள்!
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் - வ.சிவரதன்
Saturday, 10.11.2018, 01:44am (GMT)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு.சுமந்திரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்-வ.சிவரதன்


"இலங்கையின் ஆட்சி அமைப்பும் சட்டங்களும் என்றுமே எமக்கு எதுவும் தரப்போவதில்லை என்பதை உணர்த்த கூடியதாகவும், எமது உரிமைகைகளுக்காவும் ஒரு மக்கள் போராட்டம் செய்ய வேண்டிய நேரம் இது. 

இலங்கை மீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்க கூடிய அத்தனை ஆயுதங்களாகவும், அவர்களுக்கான வாயில் கதவுகளாகவும், எங்களை நாங்கள் மாற்றி கொள்ள வேண்டும். அடுத்த தேர்தல் எப்ப வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால் எதிர் வினை உடனடியாக செய்ய வேண்டும். இலங்கை அரசின் உள்ளக சட்டங்கள், நியதிகள் எத்தகையவை என்பதை சர்வதசத்துக்கு நிரூபிக்க இதை விட்டால் வேற சந்தர்ப்பம் இல்லை.

உங்க வாதப்படி பார்த்தால் சந்தர்ப்பங்களை பயன்டுத்துதல். கூட்டமைப்பு தாயகத்தில் எல்லா தமிழ் கட்சிக்கலையும் இணைத்து முடிந்தால், முஸ்லிம்களையும் இணைத்து கொண்டு போராட வேண்டும். அப்படி தாயகத்தில் ஒரு போராட்டம் நடக்கும், அதே நேரம் புலத்தில் இருக்கும் எல்லா அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்க வேண்டும். மீண்டும் எழுச்சி கொள்ள வேண்டும். இது கார்த்திகை மாதமாக இருப்பது மேலதிக பலமாக அமையும்! என வ.சிவராதன் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளன் என்ற வகையிலும், பல விமர்சனங்கள் தங்கள் மேல் சிலர் பல கோணங்களில் வைத்த போதிலும் அவற்றை எல்லாம் புறம் தள்ளி தங்கள் அரசியல் சார் கருத்துக்களை ஏற்று கொண்டவன் என்ற முறையிலும் உரிமையுடன் சில விடயங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

சிங்கள தேசமும், சிங்கள அரசும் மகாவம்ச பௌத்த சிந்தனையில் இருக்கும் வரை எமக்கான தீர்வை தர போவதில்லை என்பது அனுபவங்களால் பெற்ற உண்மையாக இருந்தாலும், அணுகுமுறை வித்தியாசம் என்ற உங்கள் யதார்த்த அரசியல் கருத்துக்களை நான் உள் வாங்கியிருந்தேன்

"நாங்கள் தெரிவு செய்திருக்கும் இந்த பாதை கட்டாயம் வெற்றியை தான் தரும் என்றில்லை. ஆனால் இது வெற்றியை தரும் என்று நான் நம்புறேன். இப்படி ஒரு முறை இருந்து இந்த முறையில் நாங்கள் அணுகி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம், ஏற்று எதிர்காலம், எம் மீது பழி சுமத்தாதிருக்க இந்த பாதையிலும் முயன்று பார்ப்போம். பாராளுமன்ற புறக்கணிப்பு, எதிர் வரிசை போன்றவற்றினூடாக கேட்டோம் தரவில்லை. ஆயுத போராட்டம் மூலம் கேட்டோம் தரவில்லை. இந்த முறை படியும் கேட்போம்.

கேட்டு தரவில்லை  என்றால் வரலாற்றில் இப்படி கேட்டும் தரவில்லை என்று ஒரு விடையை பதிவு செய்வோம்" என்று இந்த இணக்க அரசியல் ஆரம்பத்தில் கூறி இருந்தீர்கள். இந்த இடம் தான் என்னை உங்களை நோக்கி திருப்பியது. தொடர்ந்து உங்களை உங்கள் நகர்வுகளை அவதானித்து வந்தேன்.

"சிங்கள மக்கள் எங்களை எதிரிகளாக, பயங்கரவாதிகளாக பார்க்கும் மனப்பாங்கில் மாற்றத்தை கொண்டு வந்து, இனியும் ஒரு காரணத்தை கூறி தட்டி கழிக்க முடியாத நிலையில் நின்று கொண்டு, தீர்வை கேட்க போறோம் . அதுக்கு பிறகு என்ன காரணம் கூறி தட்டி கழிப்பார்கள் என்பதை பார்ப்போம் " என்றும் கூறி இருந்தீர்கள்.

"எங்களுக்கு தேவை மூச்சு விடும் இடைவெளி. மூச்சு விட முடியாத நிலையில் இருந்த மகிந்த ஆட்சியை அகற்ற காரணம் அது தான். அது எங்கள் விருப்பம் மட்டும் இல்லை. மக்களின் விருப்பமும் அது தான். நாங்கள் மகிந்தவுக்கு வாக்கு போட சொன்னால் கூட, அவர்கள் போட்டிருக்க மாட்டார்கள். சுருக்கமாக சொன்னால் நாங்க செய்தது ஒரு எதிரி மாற்றம் தான் என்றும் கூறி இருந்தீர்கள்.

அதன் படியே, உங்கள் வியூகப்படியே எல்லாம் செய்தீர்கள்.

சர்வதேசங்கள் விரும்பியபடியும், தமிழ் மக்களின் தீர்வை அடிப்படையாக கொண்டும் விட்டு கொடுக்க கூடிய அனைத்தையும் விட்டு கொடுத்தீர்கள்.

இருக்கிற அரசியலமைப்பை மாற்றினால் தான், ஒரு தீர்வை பெற்று கொள்ள முடியும் என்ற வகையில் அரசியலமைப்பு சீர்த்திருத்ததை கொண்டு வர முயற்சிகள் எடுத்தீர்கள்.

உண்மையில் அதற்காக நீங்கள் இறங்கி வேலை செய்திருந்தீர்கள். எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் யாப்பை முழுமையாக வாசித்தார்களோ தெரியவில்லை. நான் நினைக்கிறேன் பலருக்கு யாராவது எந்த இடத்தில் என்ன இருக்கு என்று சொன்னால் அந்த இடத்தை மட்டுமே வாசிக்கிற பழக்கம் மட்டுமே இருந்திருக்கும் என்று. ஆனால் நீங்கள் அப்படியல்ல. யாப்பின் சகல விடயங்களையும் வாசித்து எவை எவை மாற்றப்பட வேண்டும் என்பதை முன் மொழிந்து, அவற்றை நடைமுறைப்படுத்தவும் செய்திருந்தீர்கள்.

சமஷ்டி என்ற சொல் இல்லை என்றாலும், அதன் உள்ளடக்கம் இருக்கு என்று வாதம் செய்தீர்கள். சமஸ்டி என்ற சொல் சிங்களத்தை சினம் கொள்ள வைக்கும் சொல் என்று சொன்னீர்கள். இவை எல்லாவற்றிலும் யதார்த்தங்கள் இருந்ததால் இவற்றை நான் உள் வாங்கி இருந்தேன் .

இரண்டு பேரினவாத கட்சிகள் இணைந்த இந்த ஆட்சியில் தான் இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வரலாம் என்று நம்பினீர்கள். சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறி கடுமையாக உழைத்தீர்கள்

"ஏக்கிய ராஜ்ய" என்று சிங்களத்தில் கூறப்பட்டு இருக்கு என்றும் அதன் அர்த்தம் "ஒற்றையாட்சி தான்" என்றும் விமர்சனங்கள் எழுந்த போது, சமஸ்டி என்ற சொல்லுக்கு சிங்களத்தில் வார்த்தைகள் இல்லை. இருந்தாலும் விளக்ககத்தில் ஒற்றையாட்சிக்குள் இருக்க முடியாது என்று இருக்கு என்றும், தமிழ் ஆங்கில மொழிகளில் உள்ளவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கு என்றும் கூறி இருந்தீர்கள்.

அதன் வாத பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் அரசியலமைப்பு சீர்திருத்தம் இறுதி செய்யப்பட்டு பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட கூடிய சூழ்நிலை வரை கொண்டு வந்தீர்கள்.

அது பாராளுமன்றுக்கு கொண்டு வரப்படும் என்ற உச்சகட்ட நம்பிக்கை உங்களுக்கு இருந்தது. உங்கள் நம்பிக்கையின் எல்லை, அல்லது உங்கள் முயற்சியின் விடை இது தான் என்று தெரிந்திருந்தாலும், அந்த விடை எப்படி வரபோகிறது என்று நானும் பார்த்து கொண்டிருந்தேன்

ஆனால் நடந்தது என்ன? விடை தாராமலே, விடை தர கூடிய சூழ்நிலை உருவாக விடாமலே, சிங்கள அரசு இந்த கேமை முடித்து விட்டது.

இந்த விடை வரும் என்று நீங்க எதிர்பார்த்திருக்கவில்லை என்பது வவுனியாவில் நீங்க மைத்திரியை பேசிய பேச்சிலிருந்து புரிந்தது.

துரோகி, துரோகம் என்ற எம்மவர்களின் விமர்சனங்களை தாங்கி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக உங்கள் உழைப்புகள் மட்டுமல்ல தமிழர்களின் ஒட்டுமொத்த உழைப்புகளும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

இது தமிழர்களுக்கு புதிது அல்ல. ஆனால் உங்களுக்கு புதிது. உங்களுக்கு மட்டுமல்ல, ஆயுத போராட்டம் வீணான ஓன்று என்று நினைக்கிற கொழும்பு வாழ் மேல்தர வர்க்கத்தினர் அனைவருக்கும் புதிது.

எப்படி கேட்டாலும் சிங்கள அரசு தமிழனுக்கு எதுவும் தர போவது இல்லை, என்ற முடிவை உங்களுக்கு சிங்கள அரசு சொல்லி இருப்பதை தாங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

வவுனியாவில் பேசும் போது சொன்னீர்கள் இன்னும் முடியவில்ல என்று. அந்த நேரத்தில் சரி  இப்பொழுதும் இன்னும் முடியல என்று கூறப்போறீங்களா??

இனி புதிய அரசு, அது பெரும்பான்மை அரசா, அல்லது தொங்கு பாராளுமன்றமாக அமையுமா? எவ்வாறு அமைந்தாலும் இறுதி செய்யப்பட்ட அந்த அரசியலமைப்பு சீர்திருத்த யாப்பை அப்படியே வாயெடுப்புக்கு விடுமா? அல்லது எல்லாம் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா? என்று தெரியாத இந்த நிலையில் தங்கள் அடுத்த கட்ட அரசியல் அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே எனது கேள்வி?

கனடாவில் ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளிக்கும் போது கூறி இருந்தீர்கள் இத்தனை முயற்சிகளும் தாண்டி எமக்கான எதுவும் நடக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்வோம் என்று சொல்லி இருந்தீர்கள்.

அந்த அடுத்த கட்ட நகர்வுக்குரிய நேரம் இது என்பதை நான் உணர்கிறேன்.

தற்பொழுது மைத்திரி மகிந்த செய்தது இன்னொரு யுத்தம். மகிந்த செய்த யுத்தத்தின் மூலம் தமிழ் இனம் அழிக்கப்பட்டது. இப்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து செய்த யுத்தத்தின் மூலம் "இன நல்லிணக்கம் , ஜனநாயகம், தமிழர்களின் மிச்ச சொச்ச நம்பிக்கைகள்" என்பன அழிக்கப்பட்டு இருக்கின்றன.

இதற்கு கூட்டமைப்பு எதிர்வினை ஆற்றியே ஆக வேண்டும். மகிந்தவை பிரதமராக நியமிசத்துக்கு ரணில் மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கிறார். அதற்கு எதிராக மகிந்த மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கிறார்.

ஆனால் கூட்டமைப்பு இதுவரை எதுவும் செய்யவில்லை. போராடாமல் எதையும் பெற்று கொள்ள முடியாது.

சர்வதேசங்களை மதிக்காமல் இலங்கை ஜனாதிபதி நடந்து கொள்ளும் இந்த நேரத்தை மீண்டும் கூட்டமைப்பு பயன்படுத்தி, மிக பெரிய மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டும்.

"இலங்கையின் ஆட்சி அமைப்பும் சட்டங்களும் என்றுமே எமக்கு எதுவும் தரப்போவதில்லை என்பதை உணர்த்த கூடியதாகவும், எமது உரிமைகைகளுக்காவும் ஒரு மக்கள் போராட்டம் செய்ய வேண்டிய நேரம் இது.

இலங்கை மீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்க கூடிய அத்தனை ஆயுதங்களாகவும், அவர்களுக்கான வாயில் கதவுகளாகவும், எங்களை நாங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.

அடுத்த தேர்தல் எப்ப வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால் எதிர் வினை உடனடியாக செய்ய வேண்டும். இலங்கை அரசின் உள்ளக சட்டங்கள், நியதிகள் எத்தகையவை என்பதை சர்வதசத்துக்கு நிரூபிக்க இதை விட்டால் வேற சந்தர்ப்பம் இல்லை.

உங்க வாதப்படி பார்த்தால் சந்தர்ப்பங்களை பயன்டுத்துதல்.

கூட்டமைப்பு தாயகத்தில் எல்லா தமிழ் கட்சிக்கலையும் இணைத்து முடிந்தால், முஸ்லிம்களையும் இணைத்து கொண்டு போராட வேண்டும்.

அப்படி தாயகத்தில் ஒரு போராட்டம் நடக்கும், அதே நேரம் புலத்தில் இருக்கும் எல்லா அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்க வேண்டும். மீண்டும் எழுச்சி கொள்ள வேண்டும்.

இது கார்த்திகை மாதமாக இருப்பது மேலதிக பலமாக அமையும்!

தங்களுக்கு அறிவுரை சொல்ல கூடிய சட்டவல்லுமையோ அரசியல் அனுபவமோ எனக்கில்லை. ஆனால் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பகிர்கிறவன் என்ற முறையில் இதை உங்களுக்கு எழுதி இருக்கிறேன்.

பிழையாயின் மன்னிகவும்

நன்றி

இப்படிக்கு 
வ.சிவரதன்
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இலட்சிய உறுதி தளராது தொடர்ந்தும் பயணிப்போம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை (15.06.2018)
மாமனிதர் குணாளன் மாஸ்ரர்- தமிழீழ விடுதலைப் புலிகள்  (10.04.2018)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கண்ணீரில் வரையும் கருணை மனு விண்ணப்பம்! (19.03.2018)
நான் ஒன்றும் கருவாட்டுக்கடையில் கற்பூரம் விற்பவன் இல்லை-தமிழரசுக்கு சிவகரன் கடிதம் (03.03.2018)
வடக்கு கிழக்கில் உருவாகிறது தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் அணி! (01.03.2018)
ஜெனிவாவில் அமைகிறது ஐநாவுக்கான தமிழீழ தூதராலயம்! (26.02.2018)
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழின நன்மைக்காக ஒன்றுபடுங்கள்-கம்பன் கழகம் கோரிக்கை! (14.02.2018)
தமிழீழ மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன அறிக்கை,2017 தமிழீழ விடுதலைப் புலிகள். (27.11.2017)
முத்துக்குமாரும் முடிவல்ல; முள்ளிவாய்க்காலும் முடிவல்ல; ஆரம்பமே!! செந்தமிழன் சீமான் (29.01.2014)
இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே! – மக்கள் தீர்ப்பாயம் (17.12.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan