.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
சிறிலங்கா செய்திகள்
 
 
நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.
Thursday, 15.11.2018, 01:38pm

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பத்தின் போது, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கத்தியுடன் மோதலில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது.
பாலித தெவரப்பெருமவின் காற்சட்டைப் பையினுள் கத்தி இருப்பதையும், அவர் கையில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதையும், ஊடகவியலாளர் சஜீவ சிந்தக துல்லியமாக படம்பிடித்துள்ளார். அதேவேளை மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர கைகளால் ஐதேக உறுப்பினர்களைத்  தாக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

 

போர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன?
Thursday, 15.11.2018, 12:32pm
இன்று முற்பகல் நடந்த குழப்பங்கள், மோதல்களை அடுத்து, முடிவுக்கு வந்த நாடாளுமன்ற அமர்வு நாளை பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் என்று சபாநாயகரின் செயலகம் அறிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடிய போது, ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் அமர்ந்திருந்தனர்.
சிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி!
Thursday, 15.11.2018, 11:25am
சிறீலங்கா பாராளுமன்றம் இன்று கூடிய சிறிது நேரத்தில் சர்ச்சைக்குரிய புதிய பிரதமர் மஹிந்த  ராஜபக்ச உரையாற்ற முற்பட்ட போது அதர்கு அனுமதி வழங்குமுன் அதற்காக அனைவரிடமும்  வாக்கெடுப்பை நடத்துமாறு, லக்ஸ்மன் கிரியெல்ல கோரியதையடுத்து, ச​பையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இலங்கை அரசியல் களத்தில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள்! இது உண்மையா?
Sunday, 11.11.2018, 01:45am
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து குழுக்களுடனும், சில மேற்குலக நாடுகளுடனும் இணைந்து சிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்ற முனைவதாக மைத்திரி, மஹிந்த அணியினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதோடு இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மைத்திரி, மஹிந்த தலைமையிலான காபந்து அரசாங்கத்தின் அமைச்சர் உதய கம்மன்பில இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்றார்.

நாடாளுமன்றக் கலைப்புக்குப் பின்னால் இருந்த புலனாய்வு அறிக்கை
Sunday, 11.11.2018, 01:00am
சிறிலங்கா ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்று அரசாங்க உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு! அமெரிக்கா ஆழ்ந்த கவலை!
Friday, 09.11.2018, 07:03pm
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீச்சகப் பக்கத்தில், இதுதொடர்பான பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு – ஜனவரி 05இல் தேர்தல்
Friday, 09.11.2018, 06:57pm
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதாகவும்,  2019 ஜனவரி 05ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு இன்று  இரவு வெளியிடப்பட்டுள்ளது.
ரணிலை அகற்றுவதற்காக ஒன்றிணைந்த மகிந்த – மைத்திரி தரப்புகளிடையே உரசல்கள் ஆரம்பம்
Friday, 09.11.2018, 03:14pm
ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ச தரப்பும், மைத்திரிபால சிறிசேன தரப்பும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் முட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல – நாமல்
Friday, 09.11.2018, 11:04am
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதிகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தேவையில்லை-ரணில்
Thursday, 08.11.2018, 10:31pm
வடக்கு – கிழக்கு இணைப்பை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர பிற கட்சிகள் எதுவும் அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை, பொலிஸ் மற்றும், காணி அதிகாரங்களைப் பற்றி பேசுவதை விடுங்கள், அதற்கான அவசியம் இல்லை. என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கைதிகள் விடுதலை – முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம்- மங்களசமரவீர!
Monday, 05.11.2018, 05:49am
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இப்போது அவர்களை விடுவிக்கவுள்ளது, முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார். 
::| Latest News
::| Events
December 2018  
Su Mo Tu We Th Fr Sa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          
 
 

Site Created By: Thiliepan