.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
சிறிலங்கா செய்திகள்
 
கைதிகள் விடுதலை – முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம்- மங்களசமரவீர!
Monday, 05.11.2018, 05:49am (GMT)

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இப்போது அவர்களை விடுவிக்கவுள்ளது, முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ச கூறியுள்ளதற்கு பதிலளிக்கும் வகையில், தமது கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015இல் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்தார்.இப்போது விடுவிக்கப்படவுள்ளனர். இது அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் பாசாங்குத் தனத்தின் மற்றுமொரு கவர்ச்சிகரமான பகுதி.

இது நடந்தால், இந்த நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கான சாதகமான ஒரே நடவடிக்கை இதுவாகத் தான் இருக்கும்.” என்று அதில் கூறியுள்ளார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்
 
::| Latest News
 

Site Created By: Thiliepan