.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
சிறிலங்கா செய்திகள்
 
சிறிலங்கா நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு – ஜனவரி 05இல் தேர்தல்
Friday, 09.11.2018, 06:57pm (GMT)

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதாகவும்,  2019 ஜனவரி 05ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு இன்று  இரவு வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 (05) பிரிவின் கீழும், 33(02) -சி பிரிவின் கீழும், 62 (02)  பிரிவின் கீழும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவும், 1981 ஆம் ஆண்டின்  1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின் கீழும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய நாடாளுமன்றத்தை இன்று  நள்ளிரடன் கலைப்பதாக சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம், 2019 ஜனவரி 17ஆம் நாள் கூடும் எனவும், 2019 ஜனவரி 05ஆம் நாள், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அரசிதழ் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வரும் நொவம்பர் 19ஆம் நாள் தொடக்கம், நவம்பர் 26ஆம் நாள்  நண்பகல் வரை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அரசிதழ் மூலம் சிறிலங்கா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ரணிலை அகற்றுவதற்காக ஒன்றிணைந்த மகிந்த – மைத்திரி தரப்புகளிடையே உரசல்கள் ஆரம்பம் (09.11.2018)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல – நாமல் (09.11.2018)
தமிழர் பகுதிகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தேவையில்லை-ரணில் (08.11.2018)
கைதிகள் விடுதலை – முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம்- மங்களசமரவீர! (05.11.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan