.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
 
யாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்!
Friday, 23.11.2018, 12:51pm

தமிழீழ தேசிய மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் மாவீரர்களுக்கான பொது தூபியை சூழ மஞ்சள், சிவப்பு வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, எழுச்சிக் கோலம் அழகாக காட்சி தருகிறது.

 

புதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு!
Monday, 19.11.2018, 07:00pm
ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ், தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும், ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்   திரு.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை!
Sunday, 11.11.2018, 01:52am
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேகரிப்பு பணியில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றனர் மக்கள் நலன் காப்பகம் மற்றும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த அடைமழையின் காரணத்தினால் வாகரை மற்றும் வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் வெள்ளம் காரணத்தினால் பல பொதுமக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் இடம்பெயர்ந்து உள்ளனர்.
ஏமாற்றி விட்டார் மைத்திரி கடுமையாக சாடிய ஜனாதிபதி சடடத்தரணி எம்.ஏ.சுமந்திரன்!
Monday, 05.11.2018, 04:08pm
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர் . எங்களுடைய கட்சியை கூறு போடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார். இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்று உறுப்பினரும், ஜனாதிபதி சடடத் தரணியுமான  திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற “ஈழப் புரட்சிகர அமைப்பு- EROS மீளாய்வு பொதுக் கூட்டம்!
Tuesday, 30.10.2018, 03:55pm
சம்பூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இலங்கை உட்பட 9 நாடுகளில் பரந்து வாழ்ந்திருந்த ஆவ் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 140 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
தியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது!
Wednesday, 26.09.2018, 08:01am
தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு தினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடத்திலும், தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபியிலும் உணர்வெழுச்சியுடன்  நடைபெற்றது. இந்த நினைவு வணக்க நிகழ்வில், போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள், இனஉணர்வாளர்கள், அரசியல் வாதிகள் என பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபன் அவர்களுக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

இதன் போது மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பறவைக்கு காவடி எடுத்தும் தமது வணக்கத்தை செலுத்தியிருந்தது உணர்வு பூர்வமாக அமைந்திருந்தது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்! காணொளி 
Monday, 24.09.2018, 11:22pm
அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு கோரியும், அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தும் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி இன்று நடைபெற்றது.
திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா 
Thursday, 20.09.2018, 06:33pm
செப்ரெம்பர் 26 என்றாலே திலீபனின் நாளும் யாழ். கோட்டையும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த நினைப்பே இல்லாமல் தான், தூபிக்குப் பக்கத்தில் ஜனசக்தி இன்சூரன்ஸ் சார்பில் பந்தல் போட்டு சினிமாப் பாடல்களை அலறவிட்டு நடைபெற்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்தான் தற்போதைய யாழ். மேயர். மனம் பொறுக்காமல் யாரோ ஒருவர் இன்று திலீபனின் நினைவு நாள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார் போல இருக்கிறது.
போர்க் குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்-எம்.ஏ.சுமந்திரன
Wednesday, 19.09.2018, 09:16am
“போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார், எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். 
முல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்! -பதற்றத்தில் பொதுமக்கள்!
Friday, 22.06.2018, 03:28pm
முல்லைத்தீவில்  விடுதலைப் புலிகளின் கொடி, சீருடைகள், வெடி பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச் சென்ற மற்றொருவரைத் தேடி பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப் படையினர் இணைந்து முன்னெடுக்கும் தீவிர நடவடிக்கைகளால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
கேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்!?
Tuesday, 05.06.2018, 09:10am
கேப்பாபுலவில் காணி விடுவிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றும் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
  » முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம்...!
  » யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை!
  » கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை
  » இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்! 
  » ஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்! -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி
  » தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி!
  » நந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்! 
  » ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
  » சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி 
  » விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்! 
::| Latest News
::| Events
January 2019  
Su Mo Tu We Th Fr Sa
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    
 
 

Site Created By: Thiliepan