.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு விசாரணை இல்லை, தட்டிக் கேட்டவர்களுக்கு விசாரணையா-நாயாறு மக்கள்
Tuesday, 17.12.2013, 05:31pm (GMT)


தென்பகுதியைச் சேர்ந்தவரால் நாயாறில் 20 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டத்தை எதிர்த்து நேற்று முந்தினம் ஞாயிறு மாலை 3.30 மணியளவில் அவர் அமர்ந்திருந்த வேலியைப் பிடுங்கி எறிந்துள்ளனர். இதனையடுத்து மாலை 5 மணியளவில் கிராமத்துக்குள் வந்த பொலிஸார் வேலியைப் பிடுங்கியதற்காக கிராமத்தவர்களை நால்வரை நேற்று பொலிஸ் நிலயத்துக்கு விசாரணைக்கு வருமாறு கட்டளையிட்டுள்ளனர்.

ஆனால் தாம் விசாரணைக்கு நால்வரை மட்டும் அனுப்பப் போவதில்லை எனத் தெரிவித்த கிராம மக்கள் கிராமம் முழுவதும், நாளை பொலிஸ் நிலயத்துக்குச் செல்லவுள்ளதாக கூறியுருப்பதுடன், நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு விசாரணை இல்லை,  ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்டவர்களுக்கு விசாரணையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளதுடன், தமிழ் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செம்மலை நாயாறு காணி அபகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் நில ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக செம்மலை கிழக்கு நாயாறு கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தினை தென்னிலங்கை பெரும்பான்மையினத் தலைவர் ஒருவர் தீடீர்ரென வேலிகளை அமைத்து ஆக்கிரமிக்க முயற்சித்த நிலையில், இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

நாயாறு கிராமத்தில் கடற்றொழிலை அடிப்படை வாழ்வாதரமாகக் கொண்ட மக்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாயாறு கிராமத்தின் கரையோரப் பகுதிகளில் 300 ற்கும் மேற்பட்ட தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் வந்து முகாமிட்டு கடற்றொழில் செய்கின்றனர்.

இவர்கள் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளைப் பயன்படுத்துகின்றார்கள். என பல தடவைகள் முறையிட்ட போதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு தங்கியிருக்கும் மீனவர்களுக்கு சட்டபூர்வமான அனுமதியில்லை. எனவே அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். என கடற்றொழில் அமைச்சர் பணித்துள்ள போதும்,

அவர்கள் அங்கு வெளியேற்றப்படாத நிலையில் இந்த தென்னிலங்கை மீனவர்கள் புதிதாக கிராமத்துக்குள் நுழைந்து தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே இந்த நில ஆக்கிரமிப்பும் இடம்பெற்றுள்ளது. தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 20 ஏக்கர் நிலம் தனியாருக்குச் சொந்தமானது.

குறிப்பிட்ட காணியானது புலம்பெயர் தமிழர் இருவருக்கு சொந்தமானது. இந்த நிலையில் அவர்கள் இங்கு வந்திருந்த போது குறித்த காணியை அந்தக் கிராம மக்களுக்கு நன்கொடையாக வழங்குவது என தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்து தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் 20 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தமானது எனக் கூறியுள்ளதுடன் நிலத்தைச் சுற்றி வேலியும் அமைத்துள்ளனர். மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக அவர் கூறுயுள்ளார்.

எனினும் மக்கள் இதனைப் பொருட்படுத்தாமல் நேற்று முந்தினம் ஞாயிறு மாலை 3.30 மணியளவில் அவர் அமர்ந்திருந்த வேலியைப் பிடுங்கி எறிந்துள்ளனர். இதனையடுத்து மாலை 5 மணியளவில் கிராமத்துக்குள் வந்த பொலிஸார் வேலியைப் பிடுங்கியதற்காக கிராமத்தவர்களை நால்வரை நேற்று பொலிஸ் நிலயத்துக்கு விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளார்.

ஆனால் தாம் விசாரணைக்கு நால்வரை மட்டும் அனுப்பப் போவதில்லை எனத் தெரிவித்த கிராம மக்கள் கிராமம் முழுவதும், நாளை பொலிஸ் நிலயத்துக்குச் செல்லவுள்ளதாக கூறியுருப்பதுடன் நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு விசாரணை இல்லை,  ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்டவர்களுக்கு விசாரணையா எனவும் கேள்வியெழுப்பியுள்ளதுடன் தமிழ் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தினமும் அச்சத்தில் வாழும் கணவனை இழந்த தமிழீழப் பெண்கள்-காணொளி (14.12.2013)
வடக்கு, கிழகிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி முழுமையாக சிவில் நிர்வாத்தை ஏற்படுத்த வேண்டும் (12.12.2013)
ஒருவேளை கஞ்சிக்கே வழியில்லை-நேரில் வந்து அவலத்தை பாருங்கள்-செல்வம் அடைக்கலநாதன் (06.12.2013)
பாலியல் வன்முறைக்கு எதிராக விழிர்ப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்புப் பேரணியும்-மன்னார் (05.12.2013)
தமிழர் காணியில் விகாரை -நிலப்பறிப்பின் முதல் ஆதாரம் ஐ.நா. சபை செல்கிறது காணி உறுதி  (05.12.2013)
வலி.வடக்கு விவகாரம்: கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிலரின் செயற்பாடுகளுக்கு-கண்டனம் (22.11.2013)
படைத்தரப்பின் தீருவில் துயிலுமில்ல வளாக அபகரிப்பு முயற்சி தோல்வி! (20.11.2013)
யாழ்.பொது நூலகத்தின் முன்பாக பதற்றமான சூழல் போலீசார் அடாவடி (15.11.2013)
யாழில் காணாமல் போனவர்களின் உறவுகளின் அழுகுரல்- கமரூன் யாழ் செல்கிறார். (15.11.2013)
வலி.வடக்கு மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு ஒன்றிணைந்த மக்கள் போராட்டம் அவசியம்! (11.11.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan