.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
இரா­ணுவ மண் அணைகள், காவல் அரண்களை அகற்­று­மாறு மக்கள் கோரிக்கை
Wednesday, 18.12.2013, 10:09am (GMT)


முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்தில் பயிர் செய்கை நிலங்­க­ளையும் குடி­யி­ருப்பு பகுதிகளையும் ஊட­றுத்துச் செல்லும் இரா­ணுவ மண் அணை­க­ளையும் கைவி­டப்­பட்ட காவ­ல­ரண்களையும் அகற்­ற­வேண்டும் என மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். 

புதுக்­கு­டி­யி­ருப்பு பகு­தியில் பொது­மக்கள் குடி­யி­ருப்­புக்கள் மற்றும் பயிர்­செய்கை நிலங்­களில் யுத்­த­கா­லத்தில் போடப்­பட்ட மண் அணைகள் மற்றும் கைவி­டப்­பட்ட காவ­ல­ரண்கள் என்­பன இன்­னமும் அகற்­றப்­ப­டாமல் உள்­ளன. இதனால் விவ­சா­யி­களும் குடி­யி­ருப்­பா­ளர்­களும் பெரும் இடை­யூ­று­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

யுத்தம் முடிந்து மக்கள் மீள்­கு­டி­யேறி நான்கு வரு­டங்­களின் பின்­னரும் மண் அணைகள் அகற்­றப்­ப­டா­மை­யினால் விவ­சாய நிலங்­களில் விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­மு­டி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. கைவி­டப்­ப­ட்ட நிலை­யி­லுள்ள காவ­ல­ரண்­களில் வெடி­பொ­ருட்­களின் அபாயம் இருக்கும் என மக்கள் அச்சம் கொள்­கின்­றனர். இதனால் இவற்றை நாங்கள் அகற்ற முடி­யாது என அவர்கள் தெரி­விக்­கின்­றனர். இவ்றை இரா­ணு­வத்­தி­னரே அகற்­றித்­த­ர­வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

எனவே குடி­யி­ருப்­பு­களை ஊட­றுத்துச் செல்லும் மண் அணை­க­ளையும் பயிர் செய்கை நிலங்­களில் போடப்­பட்­டுள்ள காவ­ல­ரண்­க­ளையும் விரைவில் அகற்றும் நட­வ­டிக்­கையை இரா­ணு­வத்­தினர் மேற்­கொள்­ள­வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு விசாரணை இல்லை, தட்டிக் கேட்டவர்களுக்கு விசாரணையா-நாயாறு மக்கள் (17.12.2013)
தினமும் அச்சத்தில் வாழும் கணவனை இழந்த தமிழீழப் பெண்கள்-காணொளி (14.12.2013)
வடக்கு, கிழகிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி முழுமையாக சிவில் நிர்வாத்தை ஏற்படுத்த வேண்டும் (12.12.2013)
ஒருவேளை கஞ்சிக்கே வழியில்லை-நேரில் வந்து அவலத்தை பாருங்கள்-செல்வம் அடைக்கலநாதன் (06.12.2013)
பாலியல் வன்முறைக்கு எதிராக விழிர்ப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்புப் பேரணியும்-மன்னார் (05.12.2013)
தமிழர் காணியில் விகாரை -நிலப்பறிப்பின் முதல் ஆதாரம் ஐ.நா. சபை செல்கிறது காணி உறுதி  (05.12.2013)
வலி.வடக்கு விவகாரம்: கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிலரின் செயற்பாடுகளுக்கு-கண்டனம் (22.11.2013)
படைத்தரப்பின் தீருவில் துயிலுமில்ல வளாக அபகரிப்பு முயற்சி தோல்வி! (20.11.2013)
யாழ்.பொது நூலகத்தின் முன்பாக பதற்றமான சூழல் போலீசார் அடாவடி (15.11.2013)
யாழில் காணாமல் போனவர்களின் உறவுகளின் அழுகுரல்- கமரூன் யாழ் செல்கிறார். (15.11.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan