.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் -தமிழர்களின் புதைகுழி வாழ்க்கை
Tuesday, 24.12.2013, 11:39am (GMT)

யுத்­தத்­தின்­ போதும் அதன் பின்­னரும் வடக்கு கிழக்கில் பல இடங்­களில் மனிதப் புதை­கு­ழிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. சுண்­டுக்­குழி மகளிர் கல்­லூரி மாணவி கிரு­ஷாந்தி குமா­ர­சு­வாமி நாவற்­குழி பகு­தியில் படை­யி­னரால் வழி­­ம­றிக்­கப்­பட்டு பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டார். அவ­ருடன் அவ­ரது தாய் மற்றும் சகோ­த­ரரும் படு­கொ­லைக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். இந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது பிர­தான சந்­தேக நப­ரான இராணுவ வீரர் செம்­மணி பகு­தியில் பெரு­ம­ளவு சட­லங்கள் புதைக்­கப்­பட்ட தக­வலை வெளி­யிட்­டி­ருந்தார். இத­னை­ய­டுத்து செம்­மணி மனிதப் புதை­குழி தோண்­டப்­பட்­டது. அதி­லி­ருந்தும் பெரு­ம­ள­வான மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­டன.

இதேபோல், மிரு­சுவில் பகு­தி­யிலும் புதை­குழி தோண்­டப்­பட்­டது. இத­னை­விட வடக்கில் பல இடங்­க­ளிலும் மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. 

மன்னார், திருக்­கே­தீஸ்­வரம் ஆல­யத்­துக்கு அருகில் மனிதப் புதை­குழி ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாதையில் நீர்க்­குழாய் பொருத்­து­வ­தற்­காக குழி தோண்­டப்­பட்­ட­போது ஆறு மனித மண்­டை­யோ­டு­களும் எலும்­பு­களும் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னை­ய­டுத்து பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் மன்னார் நீதிவான் ஆனந்தி கன­க­ரட்­னத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்­தி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து கடந்த இரு தினங்­க­ளாக இந்த மனிதப் புதை­குழி தோண்டும் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. 

நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இந்த புதை­கு­ழி­யி­லி­ருந்து நான்கு மனித மண்டை ஓடு­களும் எச்­சங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன. இது­வரை 10 மண்டை ஓடுகள் இந்தக் குழி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ளன. இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கலாம் என்ற அச்சம் காணப்­ப­டு­கின்­றது.

மன்னார் ஏ 32 பிர­தான வீதியில் திருக்­கே­தீஸ்­வரம் கோவி­லுக்கு நுழையும் பாதை­யி­லேயே இந்த மனிதப் புதை­குழி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தினம் மீட்­கப்­பட்ட மனித எச்­சங்­க­ளுடன் 1982ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட 25 சத நாண­யக்­குற்றி ஒன்றும் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது. இந்த புதை­குழி தொடர்பில் ஆரம்பக் கட்ட விசா­ர­ணை­களை பொலிஸார் ஆரம்­பித்­துள்­ளனர். பல்­வேறு கோணங்­களில் இந்த விசா­ரணை இடம்­பெற்று வரு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் அஜித் ரோஹண குறிப்­பிட்­டுள்ளார்.

நாட்டில் யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் பெரு­ம­ள­வானோர் கொன்று குவிக்­கப்­பட்­டனர். இறுதி யுத்­தத்­தின்­போதும் யுத்தக் குற்­றங்கள் மேற்­கொள்ளப்­பட்­ட­தா­கவும் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் இவ்­வி­டயம் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்றும் சர்­வ­தேச சமூகம் கோரி வரு­கின்­றது. யுத்த காலத்­தின்­போதும் அதன்­பின்­னரும் காணா­மல்­போனோர் தொடர்பில் தக­வல்கள் எதுவும் அறி­ய­மு­டி­யாது அவர்­க­ளது உற­வி­னர்கள் நொந்து நூலாகிப் போயுள்­ளனர்.

இவ்­வா­றான சூழலில் மனிதப் புதை­கு­ழிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றமை மக்கள் மத்­தியில் பெரும் அச்ச நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது. மன்­னாரில் மனிதப் புதை­கு­ழியில் மனித எச்­சங்கள் மீட்­க­ப்­ப­டு­வ­தாக செய்­திகள் வெளி­யா­ன­வுடன் யுத்­தத்­தின்­போது காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் திகைப்­ப­டைந்து அதிர்ச்­சிக்­குள்­ளாகி இருக்­கின்­றனர். ஏனெனில் தமது காணா­மல்­போன உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்று தெரி­யாமல் தவித்­துக்­கொ­ண­்டி­ருக்கும் இத்­த­கை­ய­வர்கள் மனிதப் புதை­குழி என்ற சொல்லைக் கேட்ட உட­னேயே அச்­சப்­படும் நிலையே காணப்­ப­டு­கின்­றது. காணா­மல்­போன தமது உற­வு­களின் எச்­சங்­க­ளாக இவை இருக்­க­லாமோ என்ற சந்­தே­கமும் அவர்கள் மத்­தியில் ஏற்­ப­டு­கின்­றது.

மன்னார், திருக்­கே­தீஸ்­வரம் ஆல­யத்­துக்கு அருகில் தற்­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள மனித புதை­குழி தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இதன் மூலமே இந்தச் சட­லங்கள் எந்தக் காலப்­ப­கு­தி­யில் இந்த புதை­கு­ழிக்குள் புதைக்­கப்­பட்­டன என்­பதை அறிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும்.

யுத்­தத்­தின்­ போதும் அதன் பின்­னரும் வடக்கு கிழக்கில் பல இடங்­களில் மனிதப் புதை­கு­ழிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. சுண்­டுக்­குழி மகளிர் கல்­லூரி மாணவி கிரு­ஷாந்தி குமா­ர­சு­வாமி நாவற்­குழி பகு­தியில் படை­யி­னரால் வழி­­ம­றிக்­கப்­பட்டு பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டார். அவ­ருடன் அவ­ரது தாய் மற்றும் சகோ­த­ரரும் படு­கொ­லைக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். இந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது பிர­தான சந்­தேக நப­ரான இராணுவ வீரர் செம்­மணி பகு­தியில் பெரு­ம­ளவு சட­லங்கள் புதைக்­கப்­பட்ட தக­வலை வெளி­யிட்­டி­ருந்தார். இத­னை­ய­டுத்து செம்­மணி மனிதப் புதை­குழி தோண்­டப்­பட்­டது. அதி­லி­ருந்தும் பெரு­ம­ள­வான மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­டன.

இதேபோல், மிரு­சுவில் பகு­தி­யிலும் புதை­குழி தோண்­டப்­பட்­டது. இத­னை­விட வடக்கில் பல இடங்­க­ளிலும் மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. யுத்­தத்­தின்­போது பெரு­ம­ள­வானோர் கொல்­லப்­பட்­டனர். இந்தச் சட­லங்கள் அனைத்­துமே வன்னிப் பகு­தி­யி­லேயே புதைக்­கப்­பட்­டன. எனவே எதிர்­கா­லத்­திலும் மனிதப் புதை­கு­ழிகள் கண்­டு­பி­டிக்­கப்­படும் சாத்­தி­யங்கள் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

நாட்டில் 30 வரு­ட­காலம் இடம்­பெற்ற யுத்­தத்தின் கொடூ­ரங்­களா­கவே இந்த மனிதப் புதை­கு­ழிகள் காணப்­ப­டு­கின்­றன. எனவே, எதிர்­கா­லத்­தி­லா­வது இத்­த­கைய சம்­ப­வங்கள் இடம்­பெ­றாது தடுப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

அர­சாங்­க­மா­னது தற்­போது நாட்டில் இடம்­பெற்ற யுத்தப் பாதிப்­புக்கள் தொடர்­பான கணக்­கெ­டுப்பை நடத்தி வரு­கின்­றது. நாட­ளா­விய ரீதியில் இந்தக் கணக்­கெ­டுப்பு இடம்­பெ­று­கின்­றது. இறுதி யுத்தம் முடி­வ­டைந்து எதிர்­வரும் மே மாதத்­துடன் 5 வரு­டங்கள் ஆகப்­போ­கின்­றது. தற்­போ­துதான் இந்தக் கணக்­கெ­டுப்பை அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருக்­கின்­றது.

ஒரு­பக்கம் யுத்தப் பாதிப்­புக்கள் தொடர்­பி­லான கணக்­கெ­டுப்பு இடம்­பெற்று வரு­கையில் மறு­பக்கம் மனிதப் புதை­கு­ழிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றமை பாதிப்­புக்­குள்­ளான மக்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. யுத்தப் பாதிப்­புக்­க­ளுக்­குள்­ளான மக்­களின் விப­ரங்கள் எடுக்­கப்­பட்­ட­வுடன் அந்த மக்­க­ளுக்­கான உத­விகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.

இதனை தற்­போது எதிர்க்கட்­சி­களும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. அர­சாங்­க­மா­னது கடந்த 30 வரு­டங்­க­ளாக நாட்டில் இடம்­பெற்ற யுத்தப் பாதிப்­புக்கள் தொடர்­பான கணக்­கெ­டுப்பை நடத்­து­வ­துடன் மட்டும் நின்­று­வி­டாது பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண்­பது யுத்த முடிவின் பின்னர் உட­ன­டி­யாக செய்­யப்­பட்­டி­ருக்­க­வேண்­டிய விட­ய­மாகும். பாதிப்பு தொடர்­பான கணக்­கெ­டுப்பை மட்டும் நடத்­தி­விட்டு அர­சாங்கம் இருந்­து­ விடக்­கூ­டாது. யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈ­டு­களை வழங்கும் வேலைத்­திட்­டத்தை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதேபோல் யுத்­தத்தின் பின்னர் அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்ற வேண்டும். யுத்­தத்­தின்­போது வடக்கில் 80 ஆயிரம் பேர் வித­வை­­க­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களுக்கு நட்­ட­ஈட்டை வழங்கி அர­சாங்கம் தம்­மீ­தான நம்­ப­கத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­துள்ளார்.

யுத்­தத்தில் உயிர்­க­ளையும் உடைமைகளையும் இழந்து தமிழ் மக்கள் அநாதரவாகியுள்ளனர். இந்த மக்கள் தற்போது படிப்படியாக தமது வாழ்வாதாரத்தில் முன்னேறி வருகின்றனர். யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்னமும் இந்த மக்கள் முழுமையாக மீளவில்லை. எனவே, இந்த மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டுமானால் அரசாங்கமானது அந்த மக்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தீர்வொன்றினை வழங்க வேண்டும். அத்துடன் எதிர்க்கட்சிகள் கோருவதுபோல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்டஈடுகள், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை உரிய வகையில் முன்னெடுத்து தமிழ் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்வரவேண்டும். இதன் மூலமே அந்த மக்களின் காயங்களை ஓரளவுக்காவது ஆற்ற முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இரா­ணுவ மண் அணைகள், காவல் அரண்களை அகற்­று­மாறு மக்கள் கோரிக்கை (18.12.2013)
நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு விசாரணை இல்லை, தட்டிக் கேட்டவர்களுக்கு விசாரணையா-நாயாறு மக்கள் (17.12.2013)
தினமும் அச்சத்தில் வாழும் கணவனை இழந்த தமிழீழப் பெண்கள்-காணொளி (14.12.2013)
வடக்கு, கிழகிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி முழுமையாக சிவில் நிர்வாத்தை ஏற்படுத்த வேண்டும் (12.12.2013)
ஒருவேளை கஞ்சிக்கே வழியில்லை-நேரில் வந்து அவலத்தை பாருங்கள்-செல்வம் அடைக்கலநாதன் (06.12.2013)
பாலியல் வன்முறைக்கு எதிராக விழிர்ப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்புப் பேரணியும்-மன்னார் (05.12.2013)
தமிழர் காணியில் விகாரை -நிலப்பறிப்பின் முதல் ஆதாரம் ஐ.நா. சபை செல்கிறது காணி உறுதி  (05.12.2013)
வலி.வடக்கு விவகாரம்: கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிலரின் செயற்பாடுகளுக்கு-கண்டனம் (22.11.2013)
படைத்தரப்பின் தீருவில் துயிலுமில்ல வளாக அபகரிப்பு முயற்சி தோல்வி! (20.11.2013)
யாழ்.பொது நூலகத்தின் முன்பாக பதற்றமான சூழல் போலீசார் அடாவடி (15.11.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan