.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
மகசின் சிறையில் தடுப்பில் உள்ள தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கிய மகன் திடீர் சாவு-கிளிநொச்சி
Monday, 06.01.2014, 03:11pm (GMT)


மகசின் சிறையில் தடுப்பில் உள்ள தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கிய மகன் திடீர் சாவு- மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அரசியல் கைதியான கணவரை அனுமதிக்கும்படி மனைவி சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கை

கிளிநொச்சியில் திடீர் சாவடைந்த தன்னுடைய 14 வயதான மகனின் இறுதிச் சடங்குகளில் பங்குகொள்ள கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தமது கணவரை அனுமதிக்குமாறு கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி.சிவாஜினி வீரலிங்கம் அவர்கள் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவிடம் அவசர கடிதம் உடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தையின் பிரிவு ஏக்கத்தினால், அவரின் அரவணைப்புக் கிடைக்காத காரணத்தால் நீண்டகாலமாக தவித்துக் கொண்டிருந்த மகன் நேற்று ஞாயிற்றுக் கிழமை திடீரென தலைசுற்றி விழுந்து சாவடைந்துவிட்டார், இதனால் தமது குடும்பம் மிகவும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தாயாரான திருமதி,சிவாஜினி, அவர்கள் சிறிலங்கா ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருக்கும் அவசர கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத் தகவல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் வீரலிங்கம் (48 வயது) என்பவரின் மகனான நிதர்ஷனே வீரலிங்கம் என்பவரே நேற்று 05,01,2014, ஞாயிற்றுக்கிழமை திடீர் சாவடைந்தவர் ஆவார்.

சாவடைந்துள்ள  நிதர்ஷன் அவர்களின் தந்தையான, கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் வீரலிங்கம் (48 வயது) என்பவரை 2009ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தில் கைது செய்து, கடந்த ஐந்தாண்டு காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வீரலிங்கம் அவர்களின் ஏனைய 3 பிள்ளைகளும் பெண்களாவர். வீரலிங்கம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இப்போது மூத்த மகனும் சாவடைந்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதோடு, மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையின் மகனின் இருதுச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறும், தனது கணவரை விடுதலை செய்யுமாறும் கோரி திருமதி.சிவாஜினி வீரலிங்கம் அவர்கள் சிறிலங்கா ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுள்ளார்.

"என்னுடைய 14 வயதான மகனைப் பறிகொடுத்து தவித்துக்கொண்டு நிற்கின்றேன். தயவு செய்து என்னுடைய கணவரை இப்போதாவது விடுதலை செய்யுங்கள். அவர் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். என்னுடைய மூத்த மகன் தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் பல ஆண்டுகாலமாக தவித்துக்கொண்டு இருந்தவர். திடீரென தலைசுற்றி விழுந்து ஞாயிற்றுக்கிழமை சாவடைந்திருக்கின்றார். இதனால் எமது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

மகனின் இறுதிச் சடங்குகளில் பங்குகொள்வதற்காவது எனது கணரை விடுதலை செய்யுங்கள்" என மனைவி சிறிலங்கா ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இந்தத் தாயின் கோரிக்கையை சிறிலங்கா ஜனாதிபதி கவனத்தில் கொள்வாரா என்பதே மிகப்பெரிய கேள்வியாகும். 


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
26ஐ தாண்டிய மன்னார் மனிதப் புதைகுழியில்! பாரிய உண்மை புதைந்துள்ளது- பா.டெனிஸ்வரன் (06.01.2014)
கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் -தமிழர்களின் புதைகுழி வாழ்க்கை (24.12.2013)
இரா­ணுவ மண் அணைகள், காவல் அரண்களை அகற்­று­மாறு மக்கள் கோரிக்கை (18.12.2013)
நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு விசாரணை இல்லை, தட்டிக் கேட்டவர்களுக்கு விசாரணையா-நாயாறு மக்கள் (17.12.2013)
தினமும் அச்சத்தில் வாழும் கணவனை இழந்த தமிழீழப் பெண்கள்-காணொளி (14.12.2013)
வடக்கு, கிழகிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி முழுமையாக சிவில் நிர்வாத்தை ஏற்படுத்த வேண்டும் (12.12.2013)
ஒருவேளை கஞ்சிக்கே வழியில்லை-நேரில் வந்து அவலத்தை பாருங்கள்-செல்வம் அடைக்கலநாதன் (06.12.2013)
பாலியல் வன்முறைக்கு எதிராக விழிர்ப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்புப் பேரணியும்-மன்னார் (05.12.2013)
தமிழர் காணியில் விகாரை -நிலப்பறிப்பின் முதல் ஆதாரம் ஐ.நா. சபை செல்கிறது காணி உறுதி  (05.12.2013)
வலி.வடக்கு விவகாரம்: கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிலரின் செயற்பாடுகளுக்கு-கண்டனம் (22.11.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan