.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
தமிழீழத்தில், சிறிலங்கா நடத்திய போரில் காணாமற் போனவர்களில் 13,700 பேர் முறைப்பாடு
Sunday, 26.01.2014, 01:03pm (GMT)


இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கில்,(தமிழீழத்தில்) சிறிலங்கா அரச படைகள் நடத்திய தமிழர்களுக்கு எதிரான போரின் போது காணாமற் போனவர்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்கா ஜனாதிபதியின் ஆணைக்குழுகாணாமற் போனவர்கள் குறித்து செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் மீதான நடவடிக்கையின் நிலை என்ன வென்பதை உறவினர்கள் அறிந்து கொள்வதற்காக விரைவில் இணையத்தளம் ஆரம்பிக்கிறதாம் மகிந்தரின் ஆணைக்குழு. 

இது விடையம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,,,

தமிழர் தாயகத்தில் காணாமற்போனோர் தொடர்பாக ஆராயவென சிறிலங்காவில் நியமிக்கப்பட்டுள்ள மகிந்தரின் ஆணைக்குழுவுக்கு இதுவரை 13,700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கில்,(தமிழீழத்தில்) சிறிலங்கா அரச படைகள் நடத்திய தமிழர்களுக்கு எதிரான போரின் போது காணாமற் போனவர்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் நியமிக்கப்பட்டுள்ள மகிந்தரின் ஆணைக்குழுவிடம் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் 9,300 முறைப்பாடுகள் பொதுமக்கள் தொடர்பானவையாகும். ஏனைய 4300 முறைப்பாடுகள் சிறிலங்கா படையினர் தொடர்பானவை.

கிளிநொச்சியில் கடந்த 18ம் நாள் தொடக்கம் 21ம் நாள் வரை நடத்தப்பட்ட ஆணைக்குழுவின் முதல் பதிவுகளின் அமர்வை அடுத்து, அந்தப் பகுதியில் காணாமற்போன 162 பேர் தொடர்பான விபரங்கள் சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமரப்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலர் குணதாச தெரிவித்துள்ளார்.

இந்த அமர்வில் காணாமற் போனவர்கள் தொடர்பான 76 முறைப்பாடுகள் குறித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 106 புதிய முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சி அமர்வில் காணாமற்போன 440 பேர் தொடர்பாக பெருமளவானவர்கள் சாட்சியமளிக்க வந்திருந்த போதிலும், அவர்களின் சாட்சியங்களை பதிவு செய்வதை ஆணைக்குழு திட்டமிட்டது புறக்கநித்துள்ளதொடு, அனைவரிடமும் சாட்சியங்களை பதிவு செய்ய நேரம் போதவில்லை என்றும், அடுத்த கட்டமாக அங்கு சாட்சியங்களை பதிவு செய்ய ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அதன் செயலர் குணதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணாமற் போனவர்கள் குறித்து செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் மீதான நடவடிக்கையின் நிலை என்ன வென்பதை உறவினர்கள் அறிந்து கொள்வதற்காக விரைவில் இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.??????Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
மன்னார் புதைகுழியில் இன்று 3 எலும்புக் கூடுகள் மீட்பு எல்லை எதுவரை என்பது???? (22.01.2014)
தரணி எங்கும் தன்மானம் கொண்ட தமிழர்களாக தலைநிமிர தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (14.01.2014)
யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன-ஸ்டீபன் ரெப்பிடம் ஆயர்கள் (09.01.2014)
மகசின் சிறையில் தடுப்பில் உள்ள தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கிய மகன் திடீர் சாவு-கிளிநொச்சி (06.01.2014)
26ஐ தாண்டிய மன்னார் மனிதப் புதைகுழியில்! பாரிய உண்மை புதைந்துள்ளது- பா.டெனிஸ்வரன் (06.01.2014)
கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் -தமிழர்களின் புதைகுழி வாழ்க்கை (24.12.2013)
இரா­ணுவ மண் அணைகள், காவல் அரண்களை அகற்­று­மாறு மக்கள் கோரிக்கை (18.12.2013)
நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு விசாரணை இல்லை, தட்டிக் கேட்டவர்களுக்கு விசாரணையா-நாயாறு மக்கள் (17.12.2013)
தினமும் அச்சத்தில் வாழும் கணவனை இழந்த தமிழீழப் பெண்கள்-காணொளி (14.12.2013)
வடக்கு, கிழகிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி முழுமையாக சிவில் நிர்வாத்தை ஏற்படுத்த வேண்டும் (12.12.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan