.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி! நடந்தது என்ன?! 
Wednesday, 21.02.2018, 09:11am (GMT)

யாழ்ப்பாணத்தில் பேருந்து ஒன்றில் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சற்றுமுன்னர் பரவலான செய்தி ஒன்று பரவிவருகின்றது. ஆனாலும் இது தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்துச் சம்பவத்தால் பேருந்து தீயில் எரிந்ததே குறித்த செய்திக்கான காரணம் என்று தெரியவந்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்த செய்தி வருமாறு:

தனியார் பேரூந்தில் ஏற்பட்ட வெடிப்பையடுத்தே குறித்த பேரூந்தில் தீ பரவியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த பேரூந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவத்தில் 19 பேர் படுகாயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 19 பேரில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம், பண்டாரவளை – தியத்தலாவை பிரதான வீதி கஹாகொல்லை என்ற இடத்தில் இன்று காலை 5.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளையிலிருந்து அதிகாலை தியத்தலாவைக்கு சென்ற குறித்த பேரூந்து தியத்தலாவையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹெபராவை – கிராந்துருகோட்டை என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பேரூந்தின் சாரதிக்கு பின்னாலுள்ள 3 ஆவது ஆசனத்தில் ஏற்பட்ட புகையுடன் வெடிப்பு இடம்பெற்றுள்ளது. வட பகுதியிலிருந்து இராணுவத்தினர் விடுமுறையில் தென்பகுதிக்கு வரும்போது யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவைக்கு செல்லும் பேரூந்தில் வந்து தியத்தலாவையிலிருந்து மற்றைய பேரூந்தில் பயணிப்பது வழமையாகும்.

இந்நிலையில், இராணுவத்தினரும் வழமைபோன்று குறித்த பேரூந்தில் பயணித்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து, பண்டாரவளை மற்றும் தியத்தலாவைப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்! (20.02.2018)
மாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்! (18.02.2018)
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு! (14.02.2018)
எம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும்: சம்பந்தன் (13.02.2018)
தமிழீழத்தில், சிறிலங்கா நடத்திய போரில் காணாமற் போனவர்களில் 13,700 பேர் முறைப்பாடு (26.01.2014)
மன்னார் புதைகுழியில் இன்று 3 எலும்புக் கூடுகள் மீட்பு எல்லை எதுவரை என்பது???? (22.01.2014)
தரணி எங்கும் தன்மானம் கொண்ட தமிழர்களாக தலைநிமிர தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (14.01.2014)
யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன-ஸ்டீபன் ரெப்பிடம் ஆயர்கள் (09.01.2014)
மகசின் சிறையில் தடுப்பில் உள்ள தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கிய மகன் திடீர் சாவு-கிளிநொச்சி (06.01.2014)
26ஐ தாண்டிய மன்னார் மனிதப் புதைகுழியில்! பாரிய உண்மை புதைந்துள்ளது- பா.டெனிஸ்வரன் (06.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan