.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!
Thursday, 22.02.2018, 02:22pm (GMT)

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காணி அளவீட்டிற்காக இன்று காலை அங்கு நில அளவையாளர்களும் காணி உத்தியோகத்தர்களும் அங்கு சென்றுள்ளனர். 

இதன்போது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு, அதிகாரிகளை உள்நுழைய விடாமல் துரத்தியுள்ளார்கள். கோட்டாபய கடற்படை முகாமிற்காக, முள்ளிவாய்க்கால் கிழக்கிலுள்ள 617 ஏக்கர் காணியை சுவீகரிக்கவுள்ளதாக கடந்த வாரம் அங்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 

அதன் பிரகாரம் இன்று அங்கு அதிகாரிகள் சென்ற நிலையில் மக்கள் அந்நடவடிக்கையை முறியடித்துள்ளனர். வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் மக்கள் வசித்துவந்த அரச காணிகள் என 626 ஏக்கர் நிலத்திலேயே கோட்டாபய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 

பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 500 குடும்பங்கள் தமது வாழ்விடங்களை இழந்துள்ளனர். இவற்றை விடுவிக்க வேண்டுமென மக்கள் போராடி வருகின்ற நிலையில், தற்போது அதனை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த பகுதியை அபகரிக்க ஏற்கனவே பல தடவைகள் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி! நடந்தது என்ன?!  (21.02.2018)
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்! (20.02.2018)
மாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்! (18.02.2018)
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு! (14.02.2018)
எம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும்: சம்பந்தன் (13.02.2018)
தமிழீழத்தில், சிறிலங்கா நடத்திய போரில் காணாமற் போனவர்களில் 13,700 பேர் முறைப்பாடு (26.01.2014)
மன்னார் புதைகுழியில் இன்று 3 எலும்புக் கூடுகள் மீட்பு எல்லை எதுவரை என்பது???? (22.01.2014)
தரணி எங்கும் தன்மானம் கொண்ட தமிழர்களாக தலைநிமிர தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (14.01.2014)
யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன-ஸ்டீபன் ரெப்பிடம் ஆயர்கள் (09.01.2014)
மகசின் சிறையில் தடுப்பில் உள்ள தந்தையின் அரவணைப்பிற்கு ஏங்கிய மகன் திடீர் சாவு-கிளிநொச்சி (06.01.2014)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan