.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
அனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி!
Monday, 26.02.2018, 08:51am (GMT)

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று தற்போது, வடமாகாணசபையின் அமைச்சராக பதவி வகிக்கும், அனந்தி சசிதரனும், தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராகப் பதவி வகித்த சிவகரனையுமே, கட்சியில இருந்து நீக்க தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.

2015 அதிபர் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி எடுத்த முடிவுக்கு மாறாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், இவர்கள் இருவரும். ஏற்கனவே கட்சியில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது, சிவகரனை உடனடியாக நீக்கலாம் என்றும், அனந்தியை நீக்கும் முடிவை பின்னர் எடுக்கலாம் என்றும் ஒரு சாரார் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும், ஒரே காரணத்துக்கான இடைநிறுத்தப்பட்ட இருவர் மீதும் ஒரு நடவடிக்கையே எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதை அடுத்து, இவர்கள இருவரையும் கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்! (22.02.2018)
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி! நடந்தது என்ன?!  (21.02.2018)
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்! (20.02.2018)
மாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்! (18.02.2018)
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு! (14.02.2018)
எம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும்: சம்பந்தன் (13.02.2018)
தமிழீழத்தில், சிறிலங்கா நடத்திய போரில் காணாமற் போனவர்களில் 13,700 பேர் முறைப்பாடு (26.01.2014)
மன்னார் புதைகுழியில் இன்று 3 எலும்புக் கூடுகள் மீட்பு எல்லை எதுவரை என்பது???? (22.01.2014)
தரணி எங்கும் தன்மானம் கொண்ட தமிழர்களாக தலைநிமிர தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (14.01.2014)
யுத்தத்தில் கொத்துக் குண்டுகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டன-ஸ்டீபன் ரெப்பிடம் ஆயர்கள் (09.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan