.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்!
Thursday, 01.03.2018, 06:22pm (GMT)

கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகபடுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவித்து தாம் அதில் வாழ அனுமதிக்க வேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவுற்ற நிலையில் முடிவின்றி தொடர்கின்றது.கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த இவர்களின் போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவை எட்டியுள்ளது.

போராட்டத்தின் பலனாக மீள்குடியேற்ற அமைச்சால் இராணுவத்துக்கு 152 மில்லியன் ரூபா பணம் வழங்கபட்டு ஒரு தொகுதி மக்களின் காணிகள் விடுவிக்கபட்ட நிலையில் மிகுதி மக்களின் 181 ஏக்கர் வாழ்விட நிலங்கள் விடுவிக்காமல் உள்ளது. இதனால் மீதி தமது நிலங்களையும் இராணுவம் விடுவிக்க வேண்டும் என கோரி கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக வாயில் முன்பாக ஒரு வருடமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு வருட நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு அழைத்த கேப்பாபுலவு மக்கள் தமக்குரிய நிலங்களை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வடக்கு மாகாண அமைச்சர் சிவநேசன் மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், புவனேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் வருகை தந்து மக்களோடு கலந்துரையாடியிருந்தனர்.

இதனை தொடர்ந்து மக்களால் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்க பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பொலிஸார் அதிகளவில் குவிக்க ஸ்ரீபட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி! (26.02.2018)
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்! (22.02.2018)
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி! நடந்தது என்ன?!  (21.02.2018)
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்! (20.02.2018)
மாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்! (18.02.2018)
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு! (14.02.2018)
எம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும்: சம்பந்தன் (13.02.2018)
தமிழீழத்தில், சிறிலங்கா நடத்திய போரில் காணாமற் போனவர்களில் 13,700 பேர் முறைப்பாடு (26.01.2014)
மன்னார் புதைகுழியில் இன்று 3 எலும்புக் கூடுகள் மீட்பு எல்லை எதுவரை என்பது???? (22.01.2014)
தரணி எங்கும் தன்மானம் கொண்ட தமிழர்களாக தலைநிமிர தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (14.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan