.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி 
Monday, 12.03.2018, 10:47am (GMT)

சிறிலங்கா மீதான ஐ.நாவின் நெருங்கிய கண்காணிப்பும், ஈடுபாடும் தொடரும் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் பின்னரான அரசியல் நிலவரம் குறித்து இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா உதவி செயலாளருக்கு இரா.சம்பந்தன் எடுத்துக் கூறியுள்ளார்.

அத்துடன், ”சிறிலங்கா அரசாங்கம் 2015இல் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதி செய்யும் வகையில், அதனுடன் அனைத்துலக சமூகம் நெருங்கிய ஈடுபாட்டை கொண்டிருக்க வேண்டும் .

அத்துடன், ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் காணப்பட்ட தேவையற்ற இழுத்தடிப்புகள் காரணமாக, அரசாங்கம் மீதும் அதன் கட்டமைப்புகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.

மேலும் இழுத்தடிப்புகளின்றி இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும்.” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வழங்கி வரும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த ஐ.நா உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், சிறிலங்கா தொடர்பான ஐ.நா.வின் நெருங்கிய கண்காணிப்பும் ஈடுபாடும்,தொடரும் எனவும் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்! (01.03.2018)
அனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி! (26.02.2018)
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்! (22.02.2018)
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி! நடந்தது என்ன?!  (21.02.2018)
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்! (20.02.2018)
மாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்! (18.02.2018)
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு! (14.02.2018)
எம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும்: சம்பந்தன் (13.02.2018)
தமிழீழத்தில், சிறிலங்கா நடத்திய போரில் காணாமற் போனவர்களில் 13,700 பேர் முறைப்பாடு (26.01.2014)
மன்னார் புதைகுழியில் இன்று 3 எலும்புக் கூடுகள் மீட்பு எல்லை எதுவரை என்பது???? (22.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan