.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி!
Saturday, 14.04.2018, 10:00am (GMT)

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பிறந்திருக்கும் விளம்பி புது வருடத்திலாவது விடுதலை செய்வதற்கு ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பை தலைமையாகக் கொண்டு இயங்கும் நவோதயா மக்கள் முன்னணி இந்தக் கோரிக்கையை இன்று முன்வைத்துள்ளது.

நவோதயா மக்கள் முன்னணி சார்பாக சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜை நடைபெற்றது.

இந்தப் பூஜையில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவர் எஸ்.கே கிருஷ்ணா, அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகராக உள்ள கங்கை வேனியன், கட்சியின் பொதுச் செயலாளர், ஊடக இணைப்பாளர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு ஆசிபெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து ஆலயத்திற்கு முன்னால் நவோதயா மக்கள் முன்னணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நவோதயா மக்கள் முன்னணியின் சிரேஷ்ட ஆலோசகரான கங்கை வேனியன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தினார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
நந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்!  (09.04.2018)
ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (29.03.2018)
சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி  (12.03.2018)
விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்! (01.03.2018)
அனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி! (26.02.2018)
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்! (22.02.2018)
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி! நடந்தது என்ன?!  (21.02.2018)
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்! (20.02.2018)
மாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்! (18.02.2018)
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு! (14.02.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan