.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
கேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்!?
Tuesday, 05.06.2018, 09:10am (GMT)

கேப்பாபுலவில் காணி விடுவிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றும் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளதுடன், இக்கூட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச காணிப்பகுதி அதிகாரி சோ.சேந்தனும் கலந்து கொண்டார்.இதன்போது கேப்பாபுலவில் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்கள் சிலர் மீள்குடியேற்ற அமைச்சிற்கு தங்கள் காணியினை படையினருக்கு வழங்கி நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

இதன்படி கேப்பாபுலவில் 55 பேருக்குச் சொந்தமான 59.95 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்தினை எழுத்துமூலம் தெரிவிக்குமாறு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் 37 காணி உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் விருப்பத்தினை தெரிவித்துள்ளதுடன், இதில் இரண்டு காணி உரிமையாளர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கலந்துகொண்டவர்களில் பெருமளவானவர்கள் தங்களுக்கு காணிதான் வேண்டும் என்பதை வலியுறுத்தினாலும் 05 காணி உரிமையாளர்கள் தங்களுக்கு காணிக்குரிய நட்டஈடு வழங்குமாறும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த கூட்டத்திற்கு வருகைதராதவர்கள் கிராம சேவகர் ஊடாக தங்கள் விருப்பத்தினை விண்ணப்பப்படிவத்தில் நிரப்பி வழங்குமாறும் உதவி பிரதேச செயலாளர் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம்...! (15.05.2018)
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை! (07.05.2018)
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)
இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்!  (23.04.2018)
ஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்! -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி! (14.04.2018)
நந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்!  (09.04.2018)
ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (29.03.2018)
சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி  (12.03.2018)
விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்! (01.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan