.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்! காணொளி 
Monday, 24.09.2018, 11:22pm (GMT)

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு கோரியும், அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தும் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி இன்று நடைபெற்றது.


வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன் ஆரம்பித்த இப்பேரணி நகர மத்தியின் ஊடாக பண்டார வன்னியன் சிலையருகில் நிறைவு பெற்றது. 

இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது, முன்னாள் போராளிகள், பொதுமக்கள் உட்பட, பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட, பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும் எனவும்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் நல்லாட்சி அரசை விட்டு வெளியேற முடியுமா?
மக்கள் பிரதி நிதிகளே பதில் சொல்ல முடியுமா?’
‘பதவியை காப்பாற்ற இனைவோர்களே, மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளிப்பது இல்லை’
‘எதிர்கட்சி தலைவர் இதுவரை செய்த இராஜதந்திரம் என்ன? இழுத்தடிப்பு தீர்வா?
சிறையில் வாழும் நிலையில்’ போன்ற பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா  (20.09.2018)
போர்க் குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்-எம்.ஏ.சுமந்திரன (19.09.2018)
முல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்! -பதற்றத்தில் பொதுமக்கள்! (22.06.2018)
கேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்!? (05.06.2018)
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம்...! (15.05.2018)
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை! (07.05.2018)
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)
இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்!  (23.04.2018)
ஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்! -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி! (14.04.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan