.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
ஏமாற்றி விட்டார் மைத்திரி கடுமையாக சாடிய ஜனாதிபதி சடடத்தரணி எம்.ஏ.சுமந்திரன்!
Monday, 05.11.2018, 04:08pm (GMT)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர் . எங்களுடைய கட்சியை கூறு போடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார். இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்று உறுப்பினரும், ஜனாதிபதி சடடத் தரணியுமான  திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

மைத்திரிபால சிறீசேனவிற்கு பகிரங்கமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரை திருடி அரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து இருக்கின்ற அந்த மோசமான செயலை செய்த ஜனாதிபதி உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம். தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று சொன்னாவரே ஆறடி நிலத்திற்குள் போகாமல் உங்களை காப்பாற்றியது நாங்கள் அல்லவா. எங்களுடைய மக்களை கூறு போடுவதற்காகவா நாங்கள் கொண்டுவந்தோம்.

இன்று எங்களை பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக மாறி இருக்கின்றார் இது அவரது அழிவிற்கான ஆரம்பம் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்று உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும், இன்று தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற நாம் 15 ஆக குறைந்து இருக்கின்றோம் அதிலும் இங்கு சுற்றித் திரிகின்ற ஒருவரினால் அது மேலும் குறைந்து பதினான்கு ஆகிவிட்டது. அது 14 ஆக இருந்தாலும் இன்றைய சூழலில் தீர்மானிக்கின்ற சக்தி நாங்கள்தான்.

அதனை கவனமாக பிரயோகிக்க வேண்டும். கவனமாக கையாள வேண்டும். அதேவேளை பேரம்பேச வேண்டும் இரண்டையும் செய்கின்றோம். வருகின்ற நாட்களில் எங்களுடைய மக்கள் குழம்பக் கூடாது. ஏன் இவரை சந்தித்தார். ஏன் இவரை சந்தித்தார் என்று. எல்லோரையும் நாம் சந்திப்போம்.

ஆனால் எடுக்கின்ற தீர்மானம் தவறான தீர்மானமாக நாம் எடுக்க மாட்டோம். சரியான தீர்மானத்தை நாம் எடுப்போம். எங்களுடைய மக்களின் நலன் கருதியே அந்த தீர்மானம் எடுக்கப்படும். இந்நிலையில் சிறுபிள்ளைத்தனமாக நாமல் ராஜபக்ச உள்ளார். அவர் சிறுபிள்ளை தான். இன்று காலையில் டுவிட்டரில் சொல்லியிருக்கின்றார் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆலோசிக்கின்றனர் என்று.

கடந்த மூன்று வருடங்களாக எங்களோடு இணைந்து ஆலோசிக்கிறார்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் நாம் குத்துக்கரணம் அடித்துக்கொண்டு வருவோம் என்று நினைக்கின்றார்கள்.விடுவிப்பதாக இருந்தால் விடுவியுங்கள். இன்றே விடுவியுங்கள். அதற்கு என்ன ஆலோசனை. அது சரியானது நியாயமானது அவர்கள் ஒரு கணமேனும் வைத்திருக்கக் கூடாது.

நேற்றைய தினம் எங்களுடைய அறிக்கை வந்ததன் பின்னர் ஓடோடி கொடுக்கின்ற அறிக்கைகள் இவை. எங்களுடைய எதிர்ப்பை காட்டுவதனால் கைதிகள் விடுவிக்கப்படுவார்களாக இருந்தால் நாம் இன்னும் எதிர்ப்பை காட்டுவோம். அவ்வாறு எதிர்ப்பை காட்டி அவர்களை வெளியே கொண்டு வருவோம். எங்களுடைய அறிக்கை வெளிவரும் வரை இதனைச் சொல்லவில்லை. 

வந்தவுடன் அதனை சொல்லுகின்றார்கள். அவ்வாறான சில்லறை வியாபாரம் எங்களோடு செய்கின்றார்கள். அவர்கள் எங்களோடுதான் சில்லறை வியாபாரம் செய்கிறார்கள் மற்றவர்களுக்கெல்லாம் ரொக்கப்பண வேலை தான் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
திருகோணமலையில் இடம்பெற்ற “ஈழப் புரட்சிகர அமைப்பு- EROS மீளாய்வு பொதுக் கூட்டம்! (30.10.2018)
தியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது! (26.09.2018)
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்! காணொளி  (24.09.2018)
திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா  (20.09.2018)
போர்க் குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்-எம்.ஏ.சுமந்திரன (19.09.2018)
முல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்! -பதற்றத்தில் பொதுமக்கள்! (22.06.2018)
கேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்!? (05.06.2018)
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம்...! (15.05.2018)
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை! (07.05.2018)
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan