.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை!
Sunday, 11.11.2018, 01:52am (GMT)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேகரிப்பு பணியில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றனர் மக்கள் நலன் காப்பகம் மற்றும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த அடைமழையின் காரணத்தினால் வாகரை மற்றும் வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் வெள்ளம் காரணத்தினால் பல பொதுமக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் இடம்பெயர்ந்து உள்ளனர்.

இவர்களுக்கான உணவு வசதிகளை ஏற்படுத்தும் முகமாக வெள்ள நிவாரண சேகரிப்பு பணி ஆரம்பித்தல் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு இன்று 10 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் பெரும் பகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தங்கியிருக்கும் நிலையில் இவர்களுக்கான அடிப்படை வசதிகள், மருந்துவகைகள், சிறுவர்களுக்கான பால்மா வகைகள், மற்றும் பெண்களுக்கு தேவையான பொருட்கள் என அனைத்து விடயங்களிலும் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமையினால் இவர்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு தாம் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிவாரணப்பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்ததோடு.

எதிர்வரும் திங்கள் மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா அருகிலும், செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி சந்தை முன்பாகவும், புதன்கிழமை களுவாஞ்சிக்குடி சந்தை முன்பாகவும், வியாழக்கிழமை கொக்கட்டிச்சோலை பகுதியிலும், வெள்ளிக்கிழமை செங்கலடிப்பகுதியிலும் பொருட்கள் சேகரிக்கப்படவுள்ளதாகவும் வர்த்தகர்கள், செல்வந்தர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் தம்மாலான உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இவ் ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நலன் காப்பக இணைப்பாளர் கே.இராசகுமாரன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.புவனராஜ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஏமாற்றி விட்டார் மைத்திரி கடுமையாக சாடிய ஜனாதிபதி சடடத்தரணி எம்.ஏ.சுமந்திரன்! (05.11.2018)
திருகோணமலையில் இடம்பெற்ற “ஈழப் புரட்சிகர அமைப்பு- EROS மீளாய்வு பொதுக் கூட்டம்! (30.10.2018)
தியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது! (26.09.2018)
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்! காணொளி  (24.09.2018)
திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா  (20.09.2018)
போர்க் குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்-எம்.ஏ.சுமந்திரன (19.09.2018)
முல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்! -பதற்றத்தில் பொதுமக்கள்! (22.06.2018)
கேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்!? (05.06.2018)
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம்...! (15.05.2018)
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை! (07.05.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan