.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
பிரதான செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
தமிழகச் செய்திகள்
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
தமிழீழச் செய்திகள்
 
முல்லைத்தீவில் கடற்தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள்!
Tuesday, 19.03.2013, 01:07pm

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர தமிழ் கிராமங்களிற்குள் மீண்டும் தென்னிலங்கை சிங்கள கடற்றொழிலாளர்கள் பருவகால தொழிலுக்காக பிரதேச மக்களுடைய அனுமதியின்றி நுழைந்திருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களான நாயாறு, புலிபாய்ந்த கல், செம்மலை போன்ற கிராமங்களில் பருவகால தொழிலுக்காக வந்த மக்கள் நிரந்தரமாக அப்பகுதிகளில் தங்கியிருந்து கடற்றொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே - தமிழ் அமைப்புக்கள் பெல்ஜியம்
Tuesday, 19.03.2013, 11:47am
இன்று எமது சுய நிர்ணய போராட்டத்தை இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தமிழருக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வு என்று கூறி உங்கள் உறவான தமிழீழ மக்களுக்காக போராட்ட களத்தில் இறங்கியுள்ள எம் தமிழக மாணவர்களே உங்கள் அனைவர்க்கும் பெல்ஜியம் அனைத்து அமைப்புக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.
தீக்குளிக்கும் எம் உறவுகளே! இது இறுதியான அன்பான தயவான வேண்டுகோள்!
Tuesday, 19.03.2013, 10:23am

நடந்தேறும் மாணவப்போராட்டம்- மதுரை கோரிப்பாளையத்தில் ஈழத்தமிழருக்காக மாணவர் ஒருவர் தீக்குளித்து மரணித்துள்ளார். இந்தச் செய்தியானது எங்களுக்கு மன வருத்தத்தையே உண்டு பண்ணிக்கொள்கின்றது, எங்கள் பலம் இப்படி அதிக உணர்ச்சிகளால் தீக்குள் சாவதல்ல. ஒரு இயலாமை தமிழினத்தை அவமானப்படுத்தம்! அது மட்டும் இல்லாது இந்த போர் தான் இறுதி அல்ல! இதையும் கடந்து ஒரு போர் உள்ளது! ஏற்கனவே களம் கண்டவர்களால் வழி நடத்தப்படும்! அதற்காகவேனும் இளமையை வலிமை செய்யுங்கள்.

வீடுகளை அழிக்க தயாராகும் புல்டோசர்கள்! அனைத்தையும் இழக்கும் நிலையில் முள்ளியவளை மக்கள்!
Sunday, 17.03.2013, 10:37am

புல்டோசர்கள் தயாராக நிற்கின்றன…வீடுகளையும் உடைமைகளையும் அப்படியே கைவிட்டுவிட்டு ஓடுவதற்குத் தயாராகியிருக்கின்றார்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மக்கள்! போரின் முடிவு என்பது தமிழர்களின் அவல வாழ்க்கைக்கான முடிவாக அமைந்துவிடவில்லை என்பதை கடந்த சில வாரகாலமாக முள்ளியவளையில் இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில்!
Thursday, 14.03.2013, 11:00pm

ஒரு கையில் துப்பாக்கி ஏந்தி சுட்டவர்கள். மறு கையில் தங்களிடம் உள்ள கைபேசியில் அதனை பதிவு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. சாட்சியமற்ற போராக கருதப்பட்ட இலங்கை யுத்தத்தில் சாட்சியமாக நின்று இந்த விடியோ காட்சிகள், உலக சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி எடுத்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றன.. இறந்துபோன குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி மட்டும் அல்ல.. காணாமல் போன குழந்தைகளைப் பற்றி கூட ஐநா அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், குழந்தைகளின் மறுவாழ்வுப்பணிகளை இலங்கை அரசு சிறப்பாக மேற்கொண்டிருந்ததாக பாராட்டு தெரிவித்திருந்தது ஐநா அறிக்கை.

எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் தாய்த்தமிழகத்து மாணவத்தோழர்களுக்கு ஒரு செய்தி!
Sunday, 10.03.2013, 10:34pm
எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் தாய்த்தமிழகத்து மாணவத்தோழர்களுக்கு... யாழ்ப்பாணத்தில் இருந்து ஓர் செய்தி! ஒரு அவசர செய்தி .. லோயலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்தின் முக்கியத்துவத்தை எம் ஈழ மக்களிடம் எடுத்துச் செல்லவும் .. பட்டினிப் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஓர் ஊக்கம் கொடுக்கும் முகமாகவும் இன்று யாழ்பாண நகரத்தில் எம்மால் இரவோடு இரவாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்படுள்ளன.. இச்செய்தியின் முக்கியம் நன்குணர்ந்த நீங்கள் தயவுசெய்து இதனை இணைய உலகெங்கும் பரப்ப உதவிசெய்யுங்கள்... பலத்த இராணுவ கண்காணிப்பினுள்ளும் மாணவர் நாம் செய்தவற்றை லோயலா கல்லுரி மாணவர்களிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள். 
::| Latest News
::| Events
October 2018  
Su Mo Tu We Th Fr Sa
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31      
 
 

Site Created By: Thiliepan