.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழகச் செய்திகள்
 
ராஜீவ் காந்தி படுகொலை குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு - பெப்ரவரி 4ம் திகதிக்கு ஒத்திவைப்பு
Friday, 31.01.2014, 10:02am (GMT)

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கு மரண தண்டனையிலிருந்து குறைவாக வேறு தண்டனைகள் வழங்க முடியுமா என்பது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று முடிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதும் வழக்கு விசாரணையை பெப்ரவரி 4ம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருணை மனுக்கள் தொடர்பில் தீர்வையெட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் குற்றம் சுமத்தப்பட்ட மூவர் மீதான மரணை தண்டனையைக் குறைத்து வேறு தண்டனைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் இது மறுபரிசீலனை செய்யப்படுவதாகவும் அண்மையில் உச்சநீதிமன்றில் அறிவிப்பானது முருகன், சாந்தன் மற்றும் பேரரறிவாளன் ஆகிய மூவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலையுடன் தொடர்புபட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரறிவாளன் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்றில் கருணை மனுக்களை வழங்கியிருந்த போதிலும் இவர்களது கருணை மனுக்கள் 2011ல் இந்தியப் பிரதமர் பிரதீபா பாட்டீலால் நிராகரிக்கப்பட்டன. இவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதென 2000ல் உச்சநீதிமன்றம் உறுதியாக அறிவித்த போதிலும், இவர்களால் முன்வைக்கப்பட்ட கருணை மனுவை நிராகரிப்பதற்கு இந்திய அதிபருக்கு 11 ஆண்டுகள் எடுத்தன.

ராஜீவ் காந்தி மே 21, 1991ல் தமிழ்நாட்டின் சிறிபெரும்புதூர் என்கின்ற இடத்தில் வைத்து பெண் தற்கொலைதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். 1998ல் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 26 பேருக்கு நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது. எதுஎவ்வாறெனினும், 2000ல் உச்ச நீதிமன்றில் இந்த வழக்கு விவாதிக்கப்பட்ட போது நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கும் மரணதண்டனை தீர்ப்பு உறுதியாக்கப்பட்டது.

இந்திய அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியால் முன்வைக்கப்பட்ட பொதுமனு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இவற்றின் பரிந்துரையின் அடிப்படையில் 2000ல் தமிழ்நாட்டு முதலமைச்சரால் நளினிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பானது ஆயுட்கால சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது.

செப்ரெம்பர் 09, 2011ல் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனை தீர்ப்பானது சென்னை உயர் நீதிமன்றால் உறுதியாக்கப்பட்டது. இதன்பின்னர் இந்த வழக்கானது இந்திய உச்ச நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
போராட்டத்தின் அடுத்தக் கட்டம் அரசியலா?-இடிந்தகரைக் கடிதம் – 1/2014 -சுப.உதயகுமாரன் (10.01.2014)
ராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும், கிடைக்காத பதில்களும். (27.12.2013)
இலங்கை கைது செய்யப்பட்ட செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவுங்கள் (27.12.2013)
நிரபராதி பேரறிவாளன் பேசுகிறேன் - சிறையிலிருந்து ஒரு குரல் (19.12.2013)
இலங்கையில் தடுத்து வைக்கப்படடுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் (18.12.2013)
அடக்குமுறை தொடர்ந்தால் விரைவில் தமிழீழம் மலரும்:-இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (16.12.2013)
நிரபராதிகளை தூக்கிலடத் துடிக்கும் அரசைக் கண்டித்து, நாளை மாபெரும் போராட்டம்-சென்னை  (14.12.2013)
"பேரறிவாளனின் வாக்குமூலத்தை திரிபுபடுத்தி  எழுதினேன்"-முன்னாள் சி.பி.ஐ அதிகாரி (24.11.2013)
இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவர்-தடை செய்யப்பட்ட பிரதேசமாகவும் பிரகடனம் (13.11.2013)
மாநாட்டை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்-தமிழ்நாடு சட்டப் பேரவையில் மீண்டும் தீர்மானம் (12.11.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan