.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழகச் செய்திகள்
 
தமிழர்களுக்கான உரிமையை வாங்காமல் விடமாட்டோம்: - சீறும் சீமான் 
Wednesday, 11.04.2018, 11:48am (GMT)

`தமிழர்களுக்கான உரிமையை வாங்காமல் விடமாட்டோம்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. தமிழ்நாட்டில் இத்தனை பிரச்னை இருக்கும்போது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தேவையா? அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் போராட ஆரம்பித்தனர். இயக்குநர் பாரதிராஜா, 'தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப்  பேரவை' என்ற அமைப்பினை ஆரம்பித்தார். 
   
அதில் வெற்றிமாறன், அமீர், ராம், தங்கர் பச்சான், கெளதமன் எனத் திரையுலகைச் சார்ந்த பலர் இருக்கின்றனர். இந்த அமைப்போடு இணைந்து தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க சீமான், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் முன்வந்தனர். ஐ.பி.எல் புறக்கணிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலர் கைதாகினர்.

அப்போது பேசிய சீமான், ``இன்று ஐ.பி.எல் போட்டியை பார்க்கப் போனவர்கள் உணர்வற்றவர்கள். அங்குச் செருப்பை வீசி ஒரு ட்ரெய்லர்தான் காட்டியிருக்கோம். இன்னும் மெயின் பிக்சர் காட்டல. நாங்க போராடுற திட்டத்தை முடிவெடுக்கிறதுக்குள்ள டிக்கெட் எல்லாம் வித்துட்டாங்க. இல்லைனா, வேற மாதிரி பண்ணியிருப்போம். எங்களோட எதிர்ப்பை காட்டிட்டோம். ஆனாலும், போட்டி நடந்துச்சு. 

இன்னும் சென்னையில நிறையப் போட்டிகள் இருக்கு. அதுக்கு எங்ககிட்ட திட்டமிருக்கு. அதுக்கான வேலைகளை ஆரம்பிக்கப்போறோம். அடுத்து 20-ம் தேதி நடக்க வேண்டிய போட்டி சென்னையில நடக்காது. வேற ஊருக்கு மாத்திருவாங்க. மாத்த வைப்போம். ப்ளேயர்களே விளையாட வரமாட்டங்க பாருங்களேன். தமிழர்களுக்கான உரிமையை வாங்காமல் விடமாட்டோம். என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாருங்க" என்றபடி முடித்தார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இப்படி ஒருநாள் தலீவர் வைக்கோ சொல்லியிருப்பாரா??? (09.04.2018)
வணக்கத்திற்குரிய வைகோ அவர்களே...!- ஈழமகள்_அபிஷேகா (06.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பாக சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவேண்டும்! (27.02.2018)
ராஜீவ் காந்தி படுகொலை குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு - பெப்ரவரி 4ம் திகதிக்கு ஒத்திவைப்பு (31.01.2014)
போராட்டத்தின் அடுத்தக் கட்டம் அரசியலா?-இடிந்தகரைக் கடிதம் – 1/2014 -சுப.உதயகுமாரன் (10.01.2014)
ராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும், கிடைக்காத பதில்களும். (27.12.2013)
இலங்கை கைது செய்யப்பட்ட செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவுங்கள் (27.12.2013)
நிரபராதி பேரறிவாளன் பேசுகிறேன் - சிறையிலிருந்து ஒரு குரல் (19.12.2013)
இலங்கையில் தடுத்து வைக்கப்படடுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் (18.12.2013)
அடக்குமுறை தொடர்ந்தால் விரைவில் தமிழீழம் மலரும்:-இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (16.12.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan