.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழ தேசியக் கோடி
 
தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள்?! பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரும் தென்னாபிரிக்கா
Monday, 25.02.2013, 08:58pm (GMT)

தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும்! என்பது போல் பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரும் தென்னாபிரிக்கா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்துமாறு இலங்கையிடம் தென் ஆபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (25) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய தென் ஆபிரிக்க சர்வதேச விவகார பிரதி அமைச்சர் இப்ராஹிம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதே போன்ற கோரிக்கைகளைத் தான் கடந்த வருட கூட்டத் தொடரிலும் பல நாடுகள் ஸ்ரீலங்கா அரசிடம் முன்வைத்திருந்தன, ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை என்பதை அறிந்திருந்தும் தென்னாபிரிக்கா மீண்டும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளமை தமிழ்மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரிலும் கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்படும் அத்தோடு அனைத்தும் முடிந்து விடும். கோரிக்கைகளை கேட்டுவிட்டும் இணையங்களில் செய்திகளைப் பார்த்துவிட்டும் தமிழ் மக்களும் தமது காலத்தை கடத்த வேண்டியது தான்.

இந்தக் கூட்டத் தொடரிலும் தமிழ் மக்கள் பெரும் எழுச்சி கொண்டு ஐநா முன்றலில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி அதன் ஊடாக எமது கோரிக்கைகள் என்ன என்பதை அனைத்து அமைப்புக்களும் மக்கள் சக்தியின் ஊடாக முன்வைக்க வேண்டும்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்
 
::| Latest News
 

Site Created By: Thiliepan