.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழ தேசியக் கோடி
 
இன மானத்தின் மறு வடிவம் எங்கள் மாவீரர்கள்-நினைவு கூர்ந்து விளக்கேற்றுவோம்!
Sunday, 24.11.2013, 09:48pm (GMT)


மனிதா மனிதா மனிதம் எங்கே? மனிதன் யாரும் இல்லை இங்கே! 

எதிர் வரும் மாவீரர் நாளன்று, புலத்தில் எங்கள் மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடங்களிலும்,  எங்கள் வீடுகளிலும் தீபமேற்றி வீரப் புதல்வர்களை அராதிப்போம், கல்லறைகளை எல்லாம் எம் நெஞ்சறைகளில் நிறுத்தி நினைவு கூர்ந்து விளக்கேற்றுவோம்!

ஆம்! மனிதர்கள் என்று பூமியிலே நாங்கள் இன்று சுயநலவாதிகளாகவும், சர்வாதிகாரிகளாகவும், கொடுங் கோலராகவும், மனிதர்கள் என்ற முகமூடியணிந்து வாழ்ந்து கொண்டிருக் கொடிருக்கின்றோம். வாழ்க்கை என்பதே வியாபாரமாக மாறிப்போன உலகிலே, தியாகங்கள் எல்லாம் தீயிலே கருக்கிப் போனது, பிணம் தின்னும் கழுகுகளாகவும், சதிசெய்யும் நரிகளாகவும், உலகத்தில் இன்று மனிதன் வாழப்பழகிக் கொண்டுள்ளான்.

காட்டு விலங்குகள் நான்கு கால் மனிதர்களாய் அன்புடனும் ஒற்றுமையாகவும் வாழும் நேரம். மனிதன் நான்குகால் விலங்குகளாக தன் இனத்தையே வேட்டையாடும் இனவெறியனாகவும், மத வெறியனாகவும், கோரத் தாண்டவம் ஆடுகின்றான்.

அந்த வரிசையிலே இலங்கைத் தீவிலே சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழினத்திற்கு செய்த கொடுமைகள் கொலைகள் வார்த்தைகளால் வர்னிப்பது என்பது
கடினமான ஒன்று .உலகத்தில் எத்தனையோ நாடுகளிலே இனப்படுகொலைகளும் கொடுங்கோல் ஆட்சிகளும் நடைபெற்றாலும் மனித இறைச்சி விற்கப்பட்டதாக உலகத்தில் நாம் அறிந்திருக்கவில்லை ஆனால் தமிழன் இறைச்சி இங்கே கிடைக்கும் என்று தமிழன் தமிழனை இறைச்சியாக சதையும் பிண்டமுமாக கூறுபோட்டு விற்பனை செய்த இன வெறியர்கள்தான் இந்த சிங்களவர்கள். 

இப்படிப்பட்ட ஒரு இனவெறியர்கள் மத்தியிலே தமிழர்கள் எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்திருப்பர்கள் என்று சொல்வதற்கு இதை விட ஒரு உதரணம் சொல்லத் தேவையில்லை

தினம் தினம் அவலக்குரல், தினம் தினம் மரண ஓலம், தமிழர் குருதியிலே குளிப்பதற்கு சிங்கக் கொடியோடு கோரத்தாண்டவம் போட்டு ஆடியது சிங்களம். ஏரும் போரும் தானே தமிழனின் குலத் தொழில், போர்க் களத்தில் ஒலிக்க வேண்டிய போர்முரசு தினம் சாவு வீடுகளின் பறையோசையாக மாறியது.

நெற்றிக்கண்ணுடயசிவனும் கண்களைமூடிக்கொண்டான் யார்வருவார் எங்களுக்காய் யார்காப்பார் எம் இனத்தை என்று கதறியழுத தமிழினத்தின் விடியலுக்காக எழுர்ச்சி கொண்ட தமிழர்கள் அக்கினிப்பறவைகளாய் ஆள்தின்னும் சிங்களப்போய்களை விரட்ட ஈழமண்ணிலே இருந்து எழுந்த போது நானும் வருவேன், நானும் வருவேன், என் இனத்தின் விடியலுக்காய் என் உயிரையும் தருவேன் என்று புறப்பட்டது தமிழன் சேனை.

காவோலை விழக் குருத்தோலைகள் சிரிக்கும் என்று பழமொழி ஒன்று உள்ளது. ஆனால் ஈழத்தில் குருத்தோலைகள் விழ காவோலைகள் சிரித்தன. ஆணவத்தால் அல்ல, தம் வீரப் புதல்வர்களில் வீர சாகசங்கைளையும், தமிழனுக்கே உரித்தானது போரும் போர் வீரமும் என்ற வரலாற்றுச் செய்தியினை தமது பிள்ளைகள் மெய்ப்பித்துக் காட்டியதைக் கண்டு .மரணமும், மரண ஓலைகளும் தமிழன் வீட்டுக்கு அழையாத விருந்தாளிகளாய் வந்த போது உலகத்தை படைத்த பரம்பொருளும் மௌனியாக நின்ற போது, நெற்றிக் கண் களைத் திறந்து நெருப்பாக மாறியவர்கள் எங்கள் மாவீரர்கள். 

மணக் கோலம் காணாத எம் குலப் பெண்கள் எல்லாம் தினம், தினம் பிணக் கோலமாகவும் கன்னிகழியாத பெண்களெல்லாம், தலைவிரி கோலமாகவும் அவலக் குரலிட்டு அய்யோ எனக் கதறிய போது சூலம் ஏந்திய காளி தேவியும், சிங்கத்திலேறிய துர்க்கா தேவியும், தூக்கதில் இருந்து விழித்துக் கொள்ளாதா போது, தமிழ் மகள் என்று நிலம் பார்த்து நடந்த எங்கள் பெண்கள் எல்லாம் நிமிர்ந்து பார்த்து புலிமகளாய் புதியதோர் அவதாரம் எடுத்தனர்.

மரணித்துப் போன தமிழர்களுக்காய் எல்லோரும் கண்ணீர் விட்டு அழுத போது, தமிழர்களின் கண்ணீரைத் துடைத்து, தமிழீழ தேசத்தில் தமிழர்களை வாழ வைப்பதற்காக  சாகத் துணிந்த தீயாகிகள் மாவீரர்கள்.

கால் மிதிக்கும் கற்களாய் கிடந்த தமிழனெல்லாம் பிரபாகரன் என்ற சிற்பியின் கைபட்டு காலம் போற்றும் காவியமாக மாறினார்கள் தமிழர்கள் என்றால் இவர்கள் தானோ என்று உலகமே ஒரு முறை நிமிர்ந்து பார்க்கச் செய்தார்கள் மாவீரர்கள் முப்படைகளாய், முப்பரிமானம் கொண்டு தமிழன் ஈழமண்ணிலே எழுந்து நின்ற போது கதிகலங்கிப் போனது சிங்களம். 

முதுகெலும்பற்ற முல்லைக் கொடிகளாய் தவித்த தமிழனுக்கு, முள்தரித் தமரங்களாய் முதுகெலும்ப்பாய் நின்றவர்கள் மாவீரர்கள். 

தியாகங்கள் என்ற சொல்லின் உச்சகட்ட உவமயமாக மாவீரர்களைமட்டுமே உதாரனமாக சொல்லமுடியும் எத்தனை தியாகங்கள் சாதிக்க இருந்த சாதைனைகள் முன்னேற இருந்த முயற்சிகள் இளமைதந்தகாதல் காதல் தந்த இனிமை என அனைத்தையுமே அக்கினியிலே போட்டு ஈழத்தாயின் இன்னல் தீர்க்க புறப்பட்டவர்கள் மாவீரர்கள் எத்தனை அவதாரங்கள். 

மில்லராக மாலதியாக குமரப்பா புலேந்திரனாக கிட்டுவாகா காந்தரூபனாக தமிழ்ச்செல்வனாக அங்கயற்கன்னியக திலீபனாக இன்னும் கனக்கிடமுடியா எத்தனையோ வேங்கைகளை வித்தாக வித்துடல்களாக மண்ணிலே வீழ்ந்தார்கள் ஒவ்வொரு மாவீரனது மரணத்திலும் நூற்றுக்கணக்காண மறவர்கள் எழுந்தார்கள் மரணங்கள் என்பது இங்கே தொடர்கதையானது

விடுதலைக்கு வித்தான தமிழனின் சொத்தான மாவீரர்களை காவல் தெய்வங்களாய் கார்த்திகை மாதத்தின் கடவுள்களாய் நினைத்து அவர்கள் கல்லறைகளில் தீபமேற்றி கண்ணீராலும் பன்னீராலும் நீராட்டி அண்ணா தம்பி மாமன் மச்சான் அக்கா தங்கை பாட்டன் பாட்டி என அத்தனை உறவுகளும் கூடி கதைபேசி பெருமைகொள்ளும் இந்த கார்த்திகை இருபத்தியேழுதான் தமிழர்களின் தீபாவளி

முள்ளிவாய்கால் படுகொலையின் பிற்பாடு சிங்களப்பேரினவாதப்போய்களில் கைகளில் ஈழத்தீவுமுழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட போது வீரத்தின் விதை நிலங்களாய் தமிழனின் இருண்டுபோன வானத்தில் மின்னிடும் நட்சத்திரங்களாய் இருந்த மாவீரர்களின் கல்லறைகளை எல்லாம் இருந்த இடங்களே தெரியாமல் அழித் தொழித்து மாங்கனித் தீவுக்குள்ளே தாண்டவம் போடும் மாமிசப் பேய்களாய், ஏன் என்று கேட்பதற்கு யாரும் இல்லை என் நினைத்து தாண்டவம் போடுகின்றது சிங்கள சர்வாதிகார இராணுவமும் அதன் கூலிப்படைகளும்.

உலகத்தில் எத்தனையோ சர்வாதிகார நாடுகள் இருந்தாலும் அழுவதற்கும் ஆராதனை செய்வதற்கும் வரலாற்றில் சர்வாதிகாரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள யாரும் தடை விதிக்கவில்லை. ஆனால் அந்தக் கொடுமையினையும் இலங்கைத் தீவுக்குள்ளே தமிழர்கள் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தை காலம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

எதிர்வரும் மாவீரர் தினத்தன்று பொது இடங்களிலோ கோவில்கலிலோ தீபங்கள் ஏற்றி வழிபடக் கூடாது என்றும் மாவீரர் தினத் தன்று பொதுக் கூட்டங்கள் பேரணிகள் எதுவுமே இடம்பெறக் கூடாதென்றும் இராணுவம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இதற்கான காரணம் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் சிங்கள மேலாதிக்கம் இழிவுபடுத்தி பயங்கரவாதிகளை நினைவு கொள்வதற்கு அனுமதி இல்லை என்ற காரணத்தை காட்டி உள்ளது ஒரு பல்கலைக் கழகங்கள் மூடப்படும் போது நூற்றுக் கணக்காண சிறைச் சாலைகள் திறக்கப்படும் என்று கூறுவார்கள். 

ஆனால் மாவீரர் தினத்தன்று யாழ் பல்கலைக் கழகத்துக்குள்ளே மாணவர்கள் சுடர் ஏற்றி விடுவார்களோ என்ற அச்சத்திலே மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டாலும் பறவாயில்லை என்று யாழ் பல்கலைக் கழகத்தை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை மூடும்படி கட்டளையிட்டுள்ளாது இலங்கையின் ஆட்சிபீடம்.

யார் பயங்கரவாதி

யார் பயங்கரவாதி  எமது தாய் தந்தையரை கொடூரமாக கொலை செய்து, எமது அக்கா தங்கையரை கதறக்கதற கற்பழித்து, எமது அண்ணா தம்பியரை வதை முகாம்களில் வதைத்து கொலை செய்து, இனவெறி, மதவெறி, என்று தமிழன் இரத்தம் குடிக்க தினம் தினம் அலையும் சிங்களபேரினவாதமே! யார் பயங்கரவாதி? யாரை பயங்கரவாதி என்று சொல்கின்றாய்? 

இலங்கைத் தீவில் ஆட்சியாளர்களே ஆக்கிரமிப்பாளர்களாகவும் அரக்கர்களாகவும் மாறி தமிழினத்தை அழித்து இல்லாதொழிக்க ஈழமண்ணிலே காலடிவைத்த போது எதிர்த்து நின்று தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்டி தமிழினத்தின் பாதுகாவலர்களாக இருந்த எங்கள் மாவிரர்களை யாரெல்லாம் பயங்கரவாதிகள் என்று சொல்கின்றார்களோ அவர்கள்தான் பயங்கரவாதிகள் 

காலத்தின் கொடுமையா அல்லது தமிழினத்தின் சாபக் கேடா இது? விடுதலைக்காய் வித்தாகிப் போன எங்கள் மாவீரர்கள் இந்த கொடிய உலகிலே பயங்கரவாதிகள் என்று இழிவு படுத்தப்படுவதை மௌனிகளாக ஆத்திரத்தை அடிவயிற்றுக் அடக்கிய படி அமைதிகாக்கபட வேண்டிய கட்டாயத்துக்குள் ஈழத்தில் தமிழர்கள் இன்று.

இந்த நிலை தொடர்கதையாகும் ஈழத்தில் இருட்டிலே இருக்கும் என்று என்னிக்கொள்ளும் எதிரிகளுக்கு, புதியதோர் படத்தை புகட்ட வேண்டியவர்கள் இன்றயை இளையதலை முரையினர்.

இன்று பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஈழத்தில் தலை தூக்கும் அரச பயங்கர வாதத்தின் வழிகாட்டியாக எத்தனையோ வல்லரசுகள் திரைமறைவில் உள்ளன என்பதை ஒவ்வெரு தமிழர்களும் நங்கு அறிவார்கள்.

ஆனால் அன்று 1987 ஆம் ஆன்டு அகிம்சை முறையிலே  இளமைத் துடிப்பும் நிறைய எதிர்காலமும் உள்ள ஒரு இளைஞனாகிய திலீபன் போரடினான், அவரது அகிம்சையே அவரின் ஆயுதமாக மாறி அவரை கொன்றது. 

அதே சமயம் 1988 முதுமையும் தளர்வும் மிக்க  10 பிள்ளைகளின் தாயாராகிய அன்னை பூபதி அவர்கள் இந்திய வல்லாதிக்கத்தினை வெளியேறும்படி அகிம்சை ரீதியாக உண்ணாவிரதம் இருந்தார் ஆனல் காந்தியின் தேசத்துக்கே காந்தியின் விழியில் செயற்படப் பிடிக்கவில்லை இறுதிலில் அவருக்கும் அகிம்சையே எமனாகியது.

பயங்கரவாதத்திற்கு எதிரான அகிம்சையும், பயங்கரவாதமகவே கருதப்படும் என இச்சம்பவங்கள் ஒவ்வெரு தமிழனுக்கும் ஒரு நல்ல பாடம் ஒன்றை கற்றுத் தந்தது

"ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு" என்று கூறிய இயேசுபிரானையே சிலுவையில் வைத்து ஆணியால் அறைந்த இந்த உலகில் அகிம்சை என்ற சொல்லே அர்த்தமற்றது கைகளில் இருக்கும் ஆயுதங்களை களைந்துவிட்டு அகிம்சை ரீதியாக போராடும்படி எங்கள் வேகத் தடைகளாக நிற்கும் இந்தியாவும் சரி, அமெரிக்கா உற்பட மேலைத்தேய நாடுகளும் சரி, இன்று "அணுகுண்டுகளை பரீச்சிப்பதும் புதிது புதிதாக ஆயுதங்களையும்"  வாங்கி குவிப்பதுமாக உள்ள நோக்கம் என்ன??

"தனக்கு தனக்கு என்றால் சுளகும் படக்கு படக்கு என்று அடிக்குமாம்" வெறும் ஆயிரக்கணக்கண அமெரிக்கர்களை கொலைசெய்த ஒசாமா பில்லேடனை பல வருடங்கள் கழித்து மோப்பம் பிடித்து பாகிஸ்தானிடம் அனுமதிகூட பெற்றுக் கொள்ளாது அமெரிக்கப்படைகள் பலியெடுத்தன உன்மையில் பாரட்டப்படவேண்டிய விடயம். 

அனால் இலட்சக்கணக்காண மக்களை பலியெடுத்து கோடிக்கணக்கான எமது சொத்துக்களை சூறையாடி எம் சொந்த மண்ணை அபகரித்த இந்த சிங்கள பேரினவாதத்தை பழிதீர்த்து எமது மண்ணை மீட்க எமது மாவீரர்கள் ஆயுதங்களை சுமந்த போது அவர்களை பயங்கரவாதிகளாக கூறி அதே அமெரிக்காவும் அதன்  ஊதுகுழல்களும்  தடைசெய்ததன் நோகம் என்ன???

உலகத்தில் எங்காவது ஒரு மூலையிலே நீதியும் தியாயமும் புதைந்து போய் இருக்கும் அதை தோண்டி எடுத்து புத்துயிர் கொடுத்து எங்கள் மாவீரர்கள் மேல் பூசப்பட்ட அழுக்குகளை சலவை செய்து ஆரதனைக் குரியவர்களாய் உலகத்தின் முன்னர் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் உள்ளது

பயங்கரவாத ஒழிப்புப் போர்  என்ற ஒரு பாரிய போர்வையால் மூடி இலட்சக் கணக்காண தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது அமைதியாக இருந்த சுயநலவாத உலகத்திற்கு என் இனத்தைக் காப்பாற்று, போரை நிறுத்து என்று தமிழர்கள் கதறுவது கேட்காது போனபோது, உலகத்தின் நீதிமன்றம் என்று சொல்லக் கூடிய ஐ,நா சபை முன்னே தீயிலே எரிந்து முருகதாசன் விழுந்த போதும் கூட அமைதிகாத்த உலகம், எங்கள் வீரப் புதல்வர்களை பயங்கரவாதிகள் என்று சொல்வதை நிறுத்த வேண்டும் 

எதிர் வரும் மாவீரர் நாளன்று, புலத்தில் எங்கள் மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடங்களிலும்,  எங்கள் வீடுகளிலும் தீபமேற்றி வீரப் புதல்வர்களை அராதிப்போம், கல்லறைகளை எல்லாம் எம் நெஞ்சறைகளில் நிறுத்தி நினைவு கூர்ந்து விளக்கேற்றுவோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் 

-ஆதித்தன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
!ஐந்தாம் கட்ட ஈழப்போரில் தமிழீழம் விடுதலை பெறும்!-ஈழம்5.இணையம். (09.04.2013)
தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள்?! பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரும் தென்னாபிரிக்கா (25.02.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan