.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழ தேசியக் கோடி
 
தாயகம், தமிழ்நாடு. புலம்பெயர் தேசங்களில் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி
Wednesday, 27.11.2013, 12:40pm (GMT)

தாயக விடிவுக்காக போராடி உயிர்துறந்த மாவீரர்கள் நினைவாக, இன்றுமாலை தாயகத்திலும், தமிழ்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும், மாவீரர்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 6.05 மணியளவில், ஆலயங்களில் மணி ஒலி எழுப்பப்பட்டது. 6.06 மணியளவில் மாவீரர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.6.07 மணியளவில், மாவீரர்கள் நினைவாக, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகளுக்கும் மத்தியில், தாயகத்தில், மாவீரர்கள் வீடுகளிலும், பல்வேறு பொது இடங்களிலும் நினைவு கூரப்பட்டுள்ளனர்.

அதுபோல, தமிழ்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்கள் நினைவாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


இன்று மாலை 6.07 மணியளவில், பொதுஇடங்களிலும், வீடுகளிலும் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. உலகெங்கும் தமிழர்கள் வாழும் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில், மாவீரர் நாள் தொடர்பான எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாதென சிறிலங்கா படையினர் எச்சரித்துள்ளனர்.  ஆலயங்களில் மணிஒலிக்கவும், பொதுஇடங்களிலும், வீடுகளிலும் தீபம் ஏற்றவும் கூடாது என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், வடக்கு,கிழக்கு பகுதிகளில், சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும் வீதிகளில் குவிக்கப்பட்டு, திட்டமிட்டே பதற்றமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில், சோதனைக் கெடுபிடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றிப் பெருமளவு சிறிலங்கா காவல்துறையினர் குறிக்கப்பட்டுள்ளதுடன், சாதாரண உடையில் இராணுவப் புலனாய்வாளர்களும் நடமாடுகின்றனர். 

இதற்கிடையே, வடக்கு மாகாண சபையின் சார்பில், தந்தை செல்வா நினைவிடத்தில் நடத்தப்படவிருந்த மரநடுகை விழா, சிறிலங்கா அதிபர் செயலகத்தின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், நாம் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் கெடுபிடியின் மத்தியில், இறந்து போன எமது சொந்த பந்தங்களை மனதில் நினைத்து விளக்கேற்றி அமைதியான முறையில் இன்று அவர்கள் நினைவாக வீட்டுக்கொரு மரம் நடுவோம் என்று தெரிவித்துள்ளார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
போராளிகள் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள்-விடுத (27.11.2013)
இன்று ஆரம்பம் ஆகின்றது தமிழீழ தேசிய மாவீரர் நாள்-எழுச்சி நாட்கள் 25-27 (24.11.2013)
இன மானத்தின் மறு வடிவம் எங்கள் மாவீரர்கள்-நினைவு கூர்ந்து விளக்கேற்றுவோம்! (24.11.2013)
!ஐந்தாம் கட்ட ஈழப்போரில் தமிழீழம் விடுதலை பெறும்!-ஈழம்5.இணையம். (09.04.2013)
தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள்?! பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரும் தென்னாபிரிக்கா (25.02.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan