.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தமிழீழ தேசியக் கோடி
 
மாவீரர் நாள் – ஒற்றுமையான கதை உண்மையா? – சபேசன் (மீள் பிரசுரம்)
Thursday, 19.12.2013, 07:24pm (GMT)


பிரிகேடியர் தமிழ்செல்வனின் நினைவு நாளில் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். „எங்கள் அண்ணனின் தம்பிகளுடன்தான் இத்தனை நாள் மோதிக் கொண்டிருந்தோமா என்று நினைக்கின்ற போது வருத்தமாக இருக்கிறது’ உணர்ச்சி வசமாக இருக்கின்றது அவருடைய உரை

மறுபுறத்தில் தலைமைச் செயலகத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய அணியில் இருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார் „தலைமைச் செயலகம் என்பது நாட்டில் இருந்து இயங்குவது, அந்தப் பெயரை பயன்படுத்துவது அவ்வளவு நன்றாக இருக்காதுதானே! ஒரு மாற்றத்தை உணர்த்துவதாக இருக்கிறது அவருடைய பேச்சு

„ஒரு மந்தையில் இருந்து பிரிந்து போன ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே’ என்பதை விட உணர்ச்சிகரமாகவும், பரபரப்பாகவும் சில சம்பவங்கள் புலம்பெயர் நாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றன.

………

2009இல் நடந்த மாவீரர் தினத்தில் „தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் மாவீரர் தின அறிக்கை எல்லா நாடுகளிலும் வாசிக்கப்படுகிறது.

2010இல் நவம்பர் 26ஆம் திகதி ஒரு மாவீரர் தின அறிக்கையும், 27ஆம் திகதி „தலைமைச் செயலகத்தின்’ பெயரில் ஒரு மாவீரர் தின அறிக்கையும் என இரண்டு அறிக்கைகள் வருகின்றன. பிளவு பற்றிய செய்தி மெதுவாக வெளிவருகிறது.

2011இல் முதன் முறையாக புலம்பெயர் நாடுகளில் இரண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளாக இயங்கிய „அனைத்துலக தொடர்பகம்’ தனியாகவும், களத்திலிருந்து தப்பி வந்த போராளிகள் „தலைமைச் செயலககம்’ என்னும் பெயரில் தனியாகவும் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்கிறார்கள். பிளவு வெளிப்படையாக தெரிகிறது.

2012இல் மீண்டும் இரண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடக்கின்றன.

இப்பொழுது 2013இல் அனைத்து நாடுகளிலும் ஒரு மாவீரர் நாள் நிகழ்வே நடக்க இருக்கின்றது. „தலைமைச் செயலகத்தினர்’ தமது சார்பில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதை இந்த முறை தவிர்த்திருக்கிறார்கள்.

………

தலைமைச் செயலகத்திற்கு ஆதரவாக திரண்டவர்களில் பெரும்பலானாவர்கள் „அனைத்துலகத் தொடர்பகத்தின்’ செயற்பாடுகளில் அதிருப்தியும் வெறுப்பும் கொண்டிருந்தவர்கள்.

பாடசாலைகள், ஆலயங்கள், மன்றங்கள் என்று எங்கும் அனைத்துலகத் தொடர்பகத்தின் கரங்கள் நீண்டிருந்தன. அவர்கள் சொல்வதே சட்டம் என்று இருந்தது. விமர்சனம் செய்தவர்கள் மீது துரோக முத்தரை குத்தப்பட்டது.

இவற்றை எல்லாம் எதிர்த்து வெளிக்கிளம்பியவர்கள் இயல்பாக தலைமைச் செயலகத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

2009இற்கு பின்பு போராட்டம் பன்முகப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பியவர்களுக்கும் „தலைமைச் செயலகத்தின்’ மீள் உருவாக்கம் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஒரு சாதரண கலை விழா செய்வதற்கு கூட அவர்களை அனுசரித்துப் போக வேண்டும் என்றிருந்த நிலை மாறி, மாவீரர் நாள் நிகழ்வையே யாரிடம் கேட்காமல் செய்யலாம் என்கின்ற ஒரு நிலை உருவானது.

………

மாற்றங்களை விரும்பாத பழமைவாதிகள் பெரும் எண்ணிக்கையில் „அனைத்துலகத் தொடர்பகத்துடன்’ இருந்தார்கள். நூற்றுக் கணக்கான தேசிய செயற்பாட்டாளர்கள் „தலைமைச் செயலகத்துடன்’ இருந்தார்கள்.

எதிலும் சம்பந்தப்பட விரும்பாத பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்தார்கள். இதுதான் இன்றைய மாற்றத்திற்கு முக்கியமான காரணமாகியது.

ஐம்பதினாயிரம் பேர் வரை வந்த மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு இரண்டாயிரம், மூவாயிரம் பேர் வருகின்ற நிலை உருவாகியது. மக்கள் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு செல்லாமல் தவிர்த்ததற்கு பல காரணங்கள் இருந்தன.

ஆனால் „மாவீரர் நாள்’ நிகழ்வு என்பதை உணர்வுபூர்வமாக பார்த்தவர்களுக்கு இந்தப் பிளவுதான் முக்கிய காரணமாக இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்தபடி தீபத்தை ஏற்றினார்கள்.

„அனைத்துலகத் தொடர்பகம்’ இன்றைக்கு மிகப் பெரியளவில் செய்து கொண்டிருக்கின்ற ஓரே ஒரு விடயமாகிய மாவீரர் நாள் நிகழ்வுக்கும் இப்படி மக்கள் வராமல் புறக்கணித்தது, அதற்கு அச்சத்தை கொடுப்பதாக இருந்தது.

மறுபுறம் குறைந்த ஆட்பலத்தோடும், நிதி வளத்தோடும் இரண்டு ஆண்டுகள் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்திய களைப்போடு „தலைமைச் செயலகத்தினர்’ நின்றிருந்தார்கள்.

இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் இயல்பாக உருவாகத் தொடங்கியிருந்தது.

………

அனைத்துலகத் தொடர்பகத்தினரால் „ஒற்றுமையாகி விட்டோம்’ என்ற கதை பல இடங்களில் பரப்பப்படுகிறது. அவர்களின் ஒரு அணி போஸ்டர்களை ஒட்டியபடி ஒற்றுமைக் கதையை பரப்பிக் கொண்டு திரிகிறது.

அவர்களின் இன்னொரு அணியோ மாவீரர் நாள் நிதி சேகரிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது அல்லது சேகரித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் „அனைத்துலகத் தொடர்பகம்’, „தலைமைச் செயலகம்’ என்கின்ற இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்து ஒன்றாகி விட்டனவா என்றால், அதுதான் இல்லை.

இரண்டு அமைப்புக்களும் ஏதோ ஒரு புரிந்துணர்விற்கு வந்திருக்கின்றன. தலைமைச் செயலகம் இம்முறை மாவீரர் நாளை நடத்தாது விட்டுக் கொடுத்திருக்கிறது. அனைத்துலகத் தொடர்பகம் சில மாற்றங்களை செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

அவ்வளவுதான்!

மற்றையபடி இரண்டு அமைப்புக்கள் இணைகின்ற போது செய்கின்ற நடைமுறைகள் எதுவும் இங்கே இடம்பெறவில்லை.

ஆனாலும் இவ்வளவு தூரத்திற்காவது இந்த இரண்டு அமைப்புக்களும் நெருங்கி வந்திருக்கின்றனவே என்று ஒற்றுமையை விரும்புகின்றவர்கள் ஆறுதல் கொள்கிறார்கள்.

………

இந்த நெருக்கத்தை விரும்பாதவர்கள் இரண்டு தரப்பிலும் இருக்கிறார்கள்.

இத்தனை நாட்கள் „சிறிலங்கா அரசாங்கத்தால் அனுப்பப்பட்டவர்கள்’, „கேபியின் ஆட்கள்’ என்று அவர்களைப் பற்றி மக்களிடம் பரப்புரை செய்து விட்டு, பின் அவர்களுடனேயே எப்படி இணைந்து நிற்பது என்று அனைத்துலகத் தொடர்பகத்தை சேர்ந்த சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

„கணக்கு காட்டவில்லை’, „நிதியை கையாடி விட்டார்கள்’, „அரசுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்’ என்று நாமும் அவர்களைப் பற்றி சொன்னோமே என்ற சங்கடம் தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களிடமும் தெரிகிறது.

ஆனால் இது ஒரு பெரிய விடயமாக இருக்காது. „அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ என்று சொல்லி இதை இரு தரப்பும் கடந்து போய் விடும்.

அதே வேளை „அனைத்துலகத் தொடர்பகம்’ தன்னுடைய அடாவடித்தனமான அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தலைமைச் செயலகத்தை ஆதரித்தவர்கள் இந்த நெருக்கத்தை ஒரு கேள்விக்குறியோடு பார்க்கின்றார்கள்.

„நேற்று இரவு வரை அனைத்துலகச் செயற்பாட்டின் அணுகுமுறைகளில் மாற்றம் வந்ததாக தெரியவில்லை’ என்று கவலையோடு அவர்கள் கூறுகிறார்கள்.

ஐரோப்பாவின் நாடொன்றில் „தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்’ சில வாரங்களுக்கு முன்னர் நினைவு கூரப்பட்டது. இரண்டாம் லெப் மாலதியின் நினைவு நாளே „தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக’ பிரகடனப்பட்டத்தப்பட்டிருக்கிறது.

இந்த நினைவு நாள் பிரசுரங்களில் வீரச் சாவடைந்த மூத்த பெண் போராளிகளின் படங்கள் இடம்பெற்றிருக்கும். படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலியும் நடைபெறும்.

இந்த ஆண்டு மேயர் சோதியாவின் படம் இடம்பெறாமல் போய் விட்டது. மேயர் சோதியாவின் சகோதரர் தலைமைச் செயலகத்துடன் நிற்பதனால், திட்டமிட்டே இது நடைபெற்றதாக அந்த நாட்டில் இருக்கின்ற தலைமைச் செயலகத்திற்கு ஆதரவானவர்கள் சந்தேகிக்கின்றார்கள். இப்படியான பிரச்சனைகள், சந்தேகங்கள் தொடர்கின்றன.

தலைமைச் செயலகத்தின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய ஊடகங்கள் இந்த முறை தமது மாவீரர் நிகழ்வுகளை பதிவு செய்யக் கூடாது என்கின்ற தடை உத்தரவுகளும் சில நாடுகளில் இப்பொழுதும் போடப்படுகின்றன.

„அனைத்துலகத் தொடர்பகம்’ என்று சொல்லிக் கொண்டாலும், ஆளுமை மிக்க ஒரு தலைமை இல்லாததாலும், நாட்டின் கிளைகள் தமது விருப்பப்படி செயற்படுவதாலும் இப்படியான சம்பவர்கள் நடக்கின்றன.

உண்மையான ஒரு ஒற்றுமைக்கு இந்த நிலை ஒரு சவாலாக நிற்கின்றது.

………

இதனால் இன்னும் பலருக்கு நம்பிக்கை இல்லை. இந்த „ஒற்றுமைக் கதை’ எல்லாமே மாவீரர் நாளுக்காக நடத்தப்படுகின்ற நாடகங்கள் என்கின்றார்கள் அவர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமைப்படுவதாக சொல்வதும், பேச்சுவார்த்தை நடத்துவதும், மாவீரர் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் அனைத்தையும் முறிப்பதையும் அனைத்துலகத் தொடர்பகம் வழக்கமாகக் கொண்டிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆனாலும் அனைத்துலகத் தொடர்பகம் தனது செயற்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளை மெது மெதுவாக என்றாலும் மாற்றிக் கொள்ளும் என்று தமது ஆதரவாளர்களை மிகவும் கஸ்ரப்பட்டு தலைமைச் செயலகம் சமாதானம் செய்து கொண்டிருக்கிறது.

„இனி யாரையும் துரோகி என்று முத்திரை குத்த மாட்டோம்’, „மக்கள் அமைப்புக்களின் செயற்பாடுகளை குழப்ப மாட்டோம்’ போன்ற வாக்குறுதிகளை அனைத்துலகத் தொடர்பகம் கொடுத்திருக்கிறதாம்.

உண்மையில் இதுதான் இப்பொழுது வேண்டியது.

யாரும் துரோகி என்று முத்திரை குத்தப்படக் கூடாது. பல்வேறுபட்ட அமைப்புக்கள் சுதந்திரமாக தலையீடுகள் இல்லாமல் இயங்க வேண்டும்.

மாற்றத்தின் முதற்படியாக இதுவே இருக்க வேண்டும். மற்றையவைகள் தன்பாட்டில் நிகழும்.

………

குழப்பங்கள் சில இடங்களில் தொடர்ந்தாலும், சாதகமான மாற்றங்களும் ஆங்காங்கே தென்படுகின்றன.

„நாடு கடந்த அரசு’ போட்டியின்றி வேட்பாளர்களை தேர்வு செய்தததை கிண்டலடித்து சில வாரங்களுக்கு முன் ஒரு கட்டுரை வெளிவந்தது. முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, „அனைத்துலகத் தொடர்பகத்தின்’ செல்வாக்குக்கு உட்பட்ட ஊடகங்களில் இருந்து அந்தக் கட்டுரை தூக்கப்பட்டது.

„எந்த அமைப்பையும் விமர்சிக்க வேண்டாம், அனைத்தும் இயங்கட்டும்’ என்கின்ற சிந்தனை மாற்றத்தின் வெளிப்பாடுகளாக இவைகளை சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

உண்மையிலேயே மாற்றங்கள் ஏற்பட்டு, „துரோகி’ பட்டம் கட்டுகின்ற செயற்பாடுகள் முடிவுக்கு வந்து, அனைத்துக் கருத்துக்களும் மதிக்கப்படுகின்ற ஒரு சூழல் வருமானால், அதை வரவேற்பதற்கு யாரும் பின்னிற்க மாட்டார்கள்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தாயகம், தமிழ்நாடு. புலம்பெயர் தேசங்களில் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி (27.11.2013)
போராளிகள் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள்-விடுத (27.11.2013)
இன்று ஆரம்பம் ஆகின்றது தமிழீழ தேசிய மாவீரர் நாள்-எழுச்சி நாட்கள் 25-27 (24.11.2013)
இன மானத்தின் மறு வடிவம் எங்கள் மாவீரர்கள்-நினைவு கூர்ந்து விளக்கேற்றுவோம்! (24.11.2013)
!ஐந்தாம் கட்ட ஈழப்போரில் தமிழீழம் விடுதலை பெறும்!-ஈழம்5.இணையம். (09.04.2013)
தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள்?! பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரும் தென்னாபிரிக்கா (25.02.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan