.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
செய்திகள்
தமிழீழச் செய்திகள்
பிரதான செய்திகள்
ஆய்வுகள்
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரை
இன்றைய நிலவரம்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
ஈழத்தின் வித்துக்கள்
வீரத்தின் பிதாமகன்
பிரதான அறிக்கைகள்!
தமிழீழ தேசியக் கோடி
தமிழகச் செய்திகள்
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
ஈழத்தின் வித்துக்கள்
 
 
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின்  9ம்  நாள் இன்று.
Sunday, 23.09.2018, 12:00am

1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 23ம் திகதி இது திலீபனுடன் 9ம் நாள். அதிகாலை 5 மணியிருக்கும் கிழக்குப்பக்கத்திலே தேர் முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்திலிருந்து குயில் ஒன்று கூவிக்கொண்டிருந்தது. அதன் குரலிர் ஒலித்த விரக்தியின் சாயலை கேட்ட நான் திலீபனை ஏக்கத்துடன் பார்த்தேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை ஆனால் இந்தக்குயில் எம்மை எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே இந்தக் குயிலின் சோக கீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை. திலீபனை நன்றாக உற்றுப்பார்க்கிறேன்.

 

22ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின் 8ம்  நாள் இன்று..
Saturday, 22.09.2018, 12:00am
1987.ம் ஆண்டு புரட்டாதி மாதம் 22ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ம் ஆண்டின் 8ம்  நாள் இன்று.. அதிகாலையிலேயே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பி்த்துவிட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன.
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31 ஆம் ஆண்டின்  7ம்  நாள் இன்று.. 
Friday, 21.09.2018, 12:00am

1987.ம் ஆண்டு புரட்டாதி மாதம் 21ம்  திகதி தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ம் ஆண்டின்  7ம்  நாள் இன்று.. 

இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடினேன் நேற்றைய பேச்சுவார்த்தையின் முடிவு என்னவாக இருக்கும் இந்த கேள்விதான் என் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக்கொண்டிருந்தது காலை பத்துமணி வரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் என் கண்ணில் படவேயில்லை.

தமிழீழத்தில் கொண்ட உறுதியால்! இன்னமும் மயங்காமல் இருக்கிறீர்கள்!
Thursday, 20.09.2018, 07:44pm
அண்ணா!

உண்ணாமல் இருக்கும் உங்களால் எப்படி சிரிக்க முடியும்?
எனக்கு தெரியும், நீங்கள் சாகும் போதும் சிரித்துக்,கொண்டே சாவீர்கள்!
ஏனென்றால் நாங்கள் அழக் கூடாது என்பதற்காக.
எப்படி அண்ணா அழாமல் இருக்க முடியும்?

தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் ஆறாம்  நாள் இன்று.. 
Thursday, 20.09.2018, 12:00am
வாரா வாரம் வரும் எனக்கான கவிதைகளை பிரசுரமாக வெளிவிட வேண்டும் திலீபனின் குட்டி ஆசை! 1987.ம் ஆண்டு புரட்டாதி மாதம் 20,ம் திகதி தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ம் ஆண்டின் ஆறாம்  நாள் இன்று..  காலையிலிருந்து நல்லூர் கந்தசாமி கோவிலில் திலீபனின் பெயரில் நூற்றுக்கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணம் இருந்தன பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத்தொடங்கினர்.
தியாகி திலீபனின் ஈழ விடுதலைப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் ஐந்தாம் நாள் இன்று! காணொளி இணைப்பு
Wednesday, 19.09.2018, 09:17am

1987.ம் ஆண்டு புரட்டாதி மாதம்  19ம் திகதி, தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ம் ஆண்டின் ஐந்தாம் நாள் இன்று.. 

இன்னும் திலீபன் போர்வைக்கு உள்ளேயே புதைந்து கிடக்கிறான். அவனால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்து கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கி்க் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைபற்றிய செய்திகளே இடம்பெற்றிருந்தன. திலீபன் சோர்ந்து வருகிறார். மெழுவர்த்தியைப் போல அவர் சிறிது சிறிதாக உருகிக் கொண்டிருக்கிறார். அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்.

தியாகி திலீபனின் ஈழவிடுதலைப் பயண வரலாற்றின் 31ஆம் ஆண்டின் நான்காம் நாள் இன்று! காணொளி
Tuesday, 18.09.2018, 05:00am

தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர். அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார். “கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு….” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ‘ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கிட்டண்ணா, குட்டிசிறி ஜயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கின்றனர். திலீபனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.

தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் மூன்றாம் நாள் இன்று! காணொளி இணைப்பு
Monday, 17.09.2018, 06:00am

“இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது…… நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்யாக இருந்தால், தயவு செய்து இனிமேல்  என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்மைகையும் உண்டு…… என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன்.” என்று கூறி தனது உரையையை முடித்துக் கொள்ள, மழை ஓய்ந்துவிட்டது.

தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டின் இரண்டாம் நாள் இன்று! காணொளி இணைப்பு
Sunday, 16.09.2018, 01:00am

இந்த நிலையில் தியாகதீபத்தின் முதல் நாள் பயணத்தில் (1987 செப்டெம்பர் 15) முக்கியமான விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 16ம் திகதி. இது திலீபனுடன் இரண்டாம் நாள். அன்று அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தைவிட்டு எழுந்து விட்டார். முகம் கழுவி தலைவாரிக்கொண்டார். சிறுநீர் கழித்தார் ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோகமாக காணப்பட்டாலும் அதைக்காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்..

தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டின் முதலாவது நாள் இன்று! காணொளி இணைப்பு.
Saturday, 15.09.2018, 09:30am
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடி ஈழத் தமிழரின் விடுதலைக்காக தன்னுயிரை ஈர்ந்த. தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டின் முதலாவது நாள் இன்று.

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும்" என்று 

உலகத் தமிழருக்கு அறை கூவல் விடுத்து. அன்று உருகி உருகி மெழுகாகி உறைந்து போன உத்தமனின் நினைவு நாளில் அவரின் கனவை எம் நெஞ்சங்களில் சுமந்து ஈழவிடுதலை நோக்கி அனைவரும் புதிய புரட்சிக்குத் தயாராகுவோம்.
யார் இந்த தியாகி பொன் சிவகுமாரன்??
Tuesday, 05.06.2018, 11:48am
பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற் துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி வீ ரச்ச்சாவடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி வீ ரச்ச்சாவடைந்த மாவீரன் இவரே.
  » சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்!-தீபச்செல்வன்
  » "தேசத்தின் பேரன்னை" பார்வதி அம்மா!
  » உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" முருகதாசனின் மரண சாசனமும
  » அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான்.
  » மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 7ம் ஆண்டு 
  » லெப்.சாள்ஸ் அன்ரனி (சீலன்)
  » நான் முருகன் பேசுகிறேன் கேட்கலையோ உங்களுக்கு!
  » விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
  » உறங்கிக் கிடந்த தமிழக மக்களை விழிக்க வைக்க 29.01.2009, இல் தீ மூட்டியவன் முத்துக்குமார்
  » மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் 21 ஆண்டு நினைவுநாள் 
::| Latest News
::| Events
September 2018  
Su Mo Tu We Th Fr Sa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30            
 
 

Site Created By: Thiliepan