.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழத்தின் வித்துக்கள்
 
அம்மா தந்த மன வலிமை! -பிரபாகரன்!
Sunday, 30.10.2011, 04:38pm (GMT)

அம்மா தந்த மன வலிமை! -பிரபாகரன்!
பிப்ரவரி 20-ந் தேதி காலை 6.10-க்கு பார்வதியம்மாளின் இதயத்துடிப்பு நின்று போனது.

தகவல் பரவ… வல்வெட்டித்துறை தொடங்கி தமிழர் வாழும் ஈழப்பகுதிகள் முழுக்க… அங்கங்கே குடியிருப்புகளின் முகப்பிலும் மரக்கிளைகளிலும்… துயர கனத்தோடு கருப்புக்கொடிகள் பறக்க ஆரம்பித்தன. உலக நாடுகள் முழுவதிலும் இருக்கும் தமிழர்கள்… செய்தியறிந்து துயரத்தில் துடித்துப்போனார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள்… மெழுகுவர்த்திகள் ஏந்தியபடி அஞ்சலி செய்தனர். தமிழகத்திலும்… இறப்பின் எதிரொலிப்பு பலமாகவே இருந்தது.

பார்வதியம்மாளின் உயிர்பிரிந்த தகவல் சிங்கள அரசின் கவனத்துக்குப் போனதும்…. வல்வெட்டித்துறை முழுக்க ராணுவத்தைக் குவிக்க ஆரம்பித்தது. ஆனால்… கருப்பு பேட்ச் அணிந்தபடி ஈழத்தமிழர்கள் சாரிசாரியாக மருத்துவமனைக்கு வந்து… அஞ்சலி செலுத்தத் தொடங்கினர்.

கடந்த ஓராண்டாய் அம்மையாரை தன் மேற்பார்வையில் பராமரித்துவந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம்… தனது எண்ணங்களைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார். “”தேசியத் தலைவருக்கு நிகரான மனோதிடம் கொண்டவர் பார்வதியம்மாள். 10 வருடத்துக்கும் மேலாய் பக்கவாதம், கூடவே நீரிழிவு. இதில் அடிக்கடி நினைவு தப்புதல்னு கடைசிக் காலத்தில் சரீர ரீதியாக வதைபட்டுக்கொண்டிருந்தார். இதற்கிடையே அன்புத் துணைவரின் இழப்பு.. அவரைக் கடுமையாகப் பாதித் தது. இந்தநிலை யிலும்… சிங்கள அரசின் கெடு பிடியைக் கண்டு அஞ்சாமல்…. “எண்ட உயிர் என் ஈழமண்ணிலேயே போகட்டும். எண்ட உடம்பும் ஈழ மண்ணிலேயே சாம்பல் ஆகட் டும்’னு சொல்லிக்கிட்டிருந்தார். அவர் ஆசைப்பட்டது போலவே.. ஈழத்திலேயே அவர் உயிர் அடங்கி விட்டது”’என்றவர் ஒரு நிமிடம் கண்களை மூடி கடந்த காலத்துக்குப் போனார்.

“”தேசியத் தலைவர் பிரபா கரன்… தன் மாணவப் பருவத்தி லேயே….. விடுதலைப் போராட் டத்தில் தன்னை ஐக்கியப்படுத் திக்கிட்டவர். அப்பவே.. தன் பெற்றோரைப் பிரிந்த அவர்… ஏறத்தாழ 30 வருடங்கள் கழித்து… அதாவது 2003-ல் யுத்த நிறுத்தம் ஏற்பட்டபோதுதான்… தமிழ்நாட் டில் இருந்த தன் பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை யையும் பார்வதியம்மாளையும் அழைச்சிக்கிட்டார். அந்த முதிய வயதிலும் வெறுமனே இருக்காமல்… போராளிகளின் பிள்ளைகள் படித்த செஞ்சோலைப் பள்ளியை… தலைவரின் மனைவி மதிவதனியோடு சேர்ந்து பார்த்துக்கிட்டாங்க. அந்தப் பிள்ளைகளுக்கு நிறைய வீரக் கதைகளைச் சொல்லிக்கொடுத்துக் கிட்டிருந்தாங்க.

“ஒரு ஆயுதத்தையே பிள்ளையா… கருவில் சுமந்தேனே அதை நினைச்சா… இன்னும் பெருமையா இருக்கு’ன்னு அடிக்கடி தலைவர்கிட்ட சொல்லுவாங்க. அதேபோல் 2009-ல் யுத்தம் தீவிரக் கட்டத்தை அடைந்தபோது… தலைவரின் தளபதிகள்…’அம்மாவையும் அப்பாவையும் ஏதாவது ஒரு நாட்டுக்கு பத்திரமா அனுப்பிடலாம்னு சொன்னபோது…. பார்வதியம்மாள்தான்… “என் மக்களையும் மண்ணையும் விட்டுட்டு உயிர்பிழைச்சிக்கச் சொல்றீங்களா? முடியாது. எது நடந்தாலும்… இந்த மண்ணைவிட்டுப் போகமாட்டேன்’னு அழுத்தமாச் சொல்லிட்டாங்க. இதைக்கேட்ட தலைவர்… “நான் களத்தில் நிற்பதற்குக் காரணமே அம்மா தந்த மனவலிமைதான்’னு சந்தோசப்பட்டார். எல்லாம் முடிந்து…. யுத்தம் நிறுத்தப்பட்டபோது…. மக்களோட மக்களா முகாமுக்கு வந்த பார்வதியம்மாளையும் அவங்க கணவரையும் சிங்கள ராணுவம் தேடிப்பிடித்து… பனருவா தடுப்பு முகாமில் தனித் தனியாக அடைத்து… டார்ச்சர் கொடுத்துச்சு.. உடல் நலிவோடு விசாரணையை எதிர்கொண்ட வேலுப்பிள்ளை… போன ஜனவரியில் இறந்துபோனார்.

இதன்பின்தான் அரசு பார்வதியம்மாளை விடுவித்தது. உடல் குன்றியிருந்த அவங்களை மலேசியாவுக்குக் கொண்டுபோய் சிகிச்சை தந்தோம். மேலதிக சிகிச்சையை தமிழ்நாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் சொன்னதால்… இந்திய அரசிடம் விசாவை வாங்கினோம். ஒரு பெண் உதவியாளரோடு சென்னை வந்த அந்த தாயை… தன் கருப்புப் பட்டியலில் வைத்திருந்த மத்திய உளவுத்துறை சென்னையில் இறங்க அனுமதிக்காமலே திருப்பி யனுப்பிவிட்டது.

“பார்வதியம்மாளின் குடும்பத்தினர் கேட்டுகொண்டால் அவர் தமிழகத்தில் சிகிச்சைபெற ஏற்பாடு செய்யப்படும்’ என்றார் கலைஞர். இதற்காக பார்வதியம்மாள் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் கூட கலைஞருக்கு எழுதினார். ஆனால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னதை… பார்வதியம்மாளின் தன்மானம் ஏற்கவில்லை”’ என்றார் வழிந்த விழிநீரைத் துடைத்தபடியே சிவாஜிலிங்கம்.

பார்வதியம்மாளின் கடைசி நிமிடம் குறித்து நம்மிடம் விவரித்த வல்வெட்டித்துறை அரசு மருத்துவர் மயிலேறும் பெருமாளோ “”உடல்நிலை கொஞ்சம் மோசமானதால் யாழ்ப் பாணம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தேன். கொஞ்சம் உடல்நிலை தேறியதும் இங்கே அனுப்பிவைத்துவிட்டார்கள். அவரது மகள் இருக்கும் கனடாவிற்கோ தமிழகத்திற்கோ அனுப்பிவைத்திருந்தால் பிழைத்திருப்பார்”’என்றார் வருத்தம் இழையோட.

தமிழகத்தில் பார்வதியம்மாள் கணவர் சகிதமாக இருந்தபோது… மூன்று ஆண்டுகள் அவரை பராமரித்த முசிறி டாக்டர் ராஜேந்திரனோ, “”ஈழம் ஈழம் என்று துடித்த இதயம் அவருடையது. தொலைக் காட்சிகளில் எந்த நிகழ்ச்சி யையும் பார்க்காத அவர்… பிரபாகரன் குறித்த செய்திகளை மட்டும் கேட்பார். நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் ஈழம் குறித்துவரும் செய்திகளைப் படிக்கச்சொல்லி கேட்பார். ஒரு நாள் இங்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்தபோதுதான்.. அவரைப் பக்கவாதம் பாதித்தது. பிசியோ தெரபி பயிற்சிகளை ஆர்வமாக செய்துகொண்டு…. எழுந்து நடக்கவும் ஆரம்பித்தார். அவரது நம்பிக்கை அழுத்தமான நம்பிக்கை”’என்று முடித்துக் கொண்டார்.

தமிழீழ தேசத்தின் அன் னையான பார்வதியம்மாளின் மரணம்…. உலகத்தமிழர்களை கண்ணீரில் மிதக்க வைத்தி ருக்கிறது.

-இளையசெல்வன், ஜெ.டி.ஆர்

 

-தி.தமிழரசன்,Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிப்பு நிகழ்வின் இரண்டாம் கட்டமாக நேற்று லண்டனில் மதிப்பளிப்பு. (30.10.2011)
எழுச்சியுடன் லண்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வு.-காணொளி இணைப்பு (27.09.2011)
தியாகி திலீபன் அவர்களின் உண்ணா விரத சரித்திரப்போரின் ஆவணப்பதிவுகள் தொகுப்பு காணொளி (26.09.2011)
பிரித்தானியாவில் இன்று திலீபனின் நினைவுவணக்க நிகழ்வும் அடையாள உண்ணா விரதமும். (25.09.2011)
ஏரம்பு சின்னம்மா அவர்களை நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளிள் மதிப்பளித்துள்ளனர். (20.09.2011)
தியாகச்சுடர் செங்கொடியின் வித்துடல் இன்று விதைக்கப்படுகிறது- வீர மங்கையின் புரட்சிகர நடனம்! (31.08.2011)
முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று (16.08.2011)
"செஞ்சோலை படுகொலை".5 ஆம் ஆண்டு நினைவாக ஜெர்மனியில் சுடர்வணக்க நிகழ்வுகள்... "காணொளிகள்" (11.08.2011)
கரும்புலி லெப்.கேணல் பூட்டோ அவர்களின் வீரவணக்கநாள் (11.08.2011)
மேஜர் சிட்டு வின் 14 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (01.08.2011) 
::| Latest News
 

Site Created By: Thiliepan