.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழத்தின் வித்துக்கள்
 
22ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின் 8ம்  நாள் இன்று..
Saturday, 22.09.2018, 12:00am (GMT)

1987.ம் ஆண்டு புரட்டாதி மாதம் 22ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின் 8ம்  நாள் இன்று..  அதிகாலையிலேயே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பி்த்துவிட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோ சுடும் வெயிலில் கால்கடுக்க நிற்க வேண்டியேற்பட்டதால் நல்லூர் கோவிலின் மைதானம் முழுவதும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருவதை யாருமே எதிர்பார்க்கவில்லை.


இலங்கையில் மட்டுமன்றி இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப்பயணம் பற்றியே மக்கள் பெரும்பாலானோர் பேசிக்கொண்டிருப்பதாக பத்திரிகைகளில் போட்டுருந்தார்கள். அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச்செல்வம் என்ற போராளியும் அவருடன் சேர்ந்து பல பொதுமக்களும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. மட்டக்களப்பு மாநகரில் மதன் என்ற இளம் தளபதி ஒருவர் மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தை திலீபன் வழியில் இன்னும் 2 நாட்களி்ல் ஆரம்பிக்கவிருப்பதாக செய்தி கேள்விப்பட்டேன்.

இந்த மதனை தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. தமிழீழம் எங்குமே அகிம்சைப்போர் தீப்பிழம்பாக எரிந்து கொண்டிந்தது. திலீபன் ஓர் மகத்தான மனிதன்தான் இல்லையென்றால் அவன் வழியில் இத்தனை மக்கள் சக்தியா? வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருக்கும் 5 தமிழர்களை தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும் , திலீபனின் படத்தையும் பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள். ஈழமுரசு பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையில் சாகும் வரை உண்ணாவிரதமிருக்கும் திருமதி. நல்லையா , செல்வி. குகசாந்தினி, செல்வி. சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப்போருக்கு வெற்றி முரசு கொட்டிக்கொண்டிருந்தன.

பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் பல பொது சன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரத போராட்டத்தில் வந்து பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தனர். இந்த எழுச்சியை மக்களின் வெள்ளத்தைப்பார்ப்பதற்கென்றே தினமும் யாழ் நகரைச்சுற்றிசுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்தன இந்திய சாமாதானப்படையின் கெலிகொப்ரர்கள்.  புலிகள் ஆயுதப்போராட்டத்தி்ல் மட்டுமல்ல அகிம்சை போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேரும் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஒரு சரித்திரமாகிக் கொண்டிருந்தது. அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்துவிட்டன. முகம் சருகைப் போல் காய்ந்து கிடக்கிறது. தலை மயிர்கள் குழம்பிக்கிடக்கின்றன. வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியைப்போல் வதங்கிக்கிடக்கின்றார். அவரால் விழிகளை இன்று திறக்க முடியவில்லை பார்க்கமுடியவில்லை. பேசமுடியவில்லை சிரிக்கமுடியவில்லை ஆம் தூங்க மட்டும் தான் முடிகிறது.

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த கோர நிலமை. மகளிர் அமைப்பு உறுப்பினர் சனங்களை வழிநடத்திக்கொண்டிருந்தனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள். சிந்திய குருதியால் சிவந்த தமிழ் மண்ணில் சந்ததி ஒன்று சரித்திரம் படைக்க முந்திடும் என்பதால் முளையிலே கிள்ளிட சிந்தனை செய்தவர் சிறு நரிக்கூட்டமாய் இந்தியப்படை என்னும் பெயரில் வந்தெம் சந்திரன் போன்ற திலீபனின் உயிரினை பறித்திட எண்ணினார். பாரிலே புரட்சி வெடித்திடும் என்று வெறியுடன் அவர்களை எச்சரிக்கின்றேன். திலீபனுடைய மருத்துவ நிலமை மிகவும் மோசமாகிக்கொண்டு போனது. இன்று இரத்த அழுத்தம் 80 ற்கு குறைந்திருந்தது. நாடித்துடிப்பு 140 ஆக ஏறியிருந்தது.

செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (1)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31 ஆம் ஆண்டின்  7ம்  நாள் இன்று..  (21.09.2018)
தமிழீழத்தில் கொண்ட உறுதியால்! இன்னமும் மயங்காமல் இருக்கிறீர்கள்! (20.09.2018)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் ஆறாம்  நாள் இன்று..  (20.09.2018)
தியாகி திலீபனின் ஈழ விடுதலைப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் ஐந்தாம் நாள் இன்று! காணொளி இணைப்பு (19.09.2018)
தியாகி திலீபனின் ஈழவிடுதலைப் பயண வரலாற்றின் 31ஆம் ஆண்டின் நான்காம் நாள் இன்று! காணொளி (18.09.2018)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் மூன்றாம் நாள் இன்று! காணொளி இணைப்பு (17.09.2018)
தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டின் இரண்டாம் நாள் இன்று! காணொளி இணைப்பு (16.09.2018)
தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டின் முதலாவது நாள் இன்று! காணொளி இணைப்பு. (15.09.2018)
யார் இந்த தியாகி பொன் சிவகுமாரன்?? (05.06.2018)
சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்!-தீபச்செல்வன் (22.02.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan