.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழத்தின் வித்துக்கள்
 
வீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று!
Wednesday, 26.09.2018, 01:00am (GMT)

வீரவணக்கம்

தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று! மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, உண்ணாவிரத மேடையில் உருகிய தியாக தீபம் திலீபன் அவர்கள்.


திலீபனின் உண்ணாவிரதம் என் நடந்தது, திலீபன் ஏன் எம்மை விட்டுப் பிரிந்தான்!...

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில்  மகத்தான சரித்திரம் படைத்த நாள், இலங்கைத் தீவில் சிங்கள இனவெறி அரசினாலும், அதன் படைகளாலும் தமிழீழ மக்கள் அடக்கு முறைகளுக்கும், கலவரங்களுக்கும் உள்ளாக்கப்பட்டவாறு, இனவழிப்பிற்கு உள்ளாகிவந்த நிலையில், அதனை எதிர்த்து தமிழீழ மண்ணையும், மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் இலங்கை அரச படைகள் மீது தொடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவின் காலடியில் சிங்களம் மண்டியிட்டது.

அதன் பயனாக இலங்கை இந்திய- ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முழுமையான அனுமதி இன்றி கைச்சாத்திடப்பட்ட நிலையில் இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவத்தினர் கால் பதித்தது.

இந்தியப் படைகள் தமிழ்மக்களின் பாதுகாப்பிற்கு என்ற பெயரில் தமிழர் தாயகத்திற்கு வருகை தந்திருந்த பின்னரும், சிறிலங்கா அரச படைகள்தமிழர் தாயகத்தில் மேற்கொண்டுவந்த நிலப்பறிப்புக்களும், இராணுவ முகாம்கள் அமைக்கும் நடவடிக்கைகளும், சிங்களக் குடியேற்றங்களும், தமிழ் இளையோர்கள் கைது செய்யப்பட்டு காலவரையறை இன்றி தடுத்து வைக்கப்படுதலும் தொடர்ந்து வந்த நிலையில், இந்திய, இலங்கை அரசுகளிடம்  ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து 15.09.1987, முதல் நீரும் அருந்தாது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை திலீபன் அவர்கள் முன்னெடுத்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள் பன்னிரண்டு நாளாக நீரும் அருந்தாது முன்னெடுத்துவந்த போராட்டத்தை காந்தியின் தேசம் என பறைசாற்றும் இந்திய தேசம் கண்டுகொள்ளவில்லை, அமைதிப்படை என்ற போர்வையில், சிங்கள இன வெறியர்களுக்கு ஆதரவாக அமைதிப் படை என்ற பெயரில் தமிழர் தாயகத்தை ஆட்கொண்டிருந்த இந்தியப் படைகளின் உண்மை முகத் திரையை  திலீபன் அவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டமும் அவரின் வீரச்சாவும் கிழித்தெறிந்தது.  

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ விடியலுக்காய் தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் மூழ்க வைத்தது திலீபனின் வீரச்சாவு..

ஆண்ட தன் இனம் அந்நியரிடம் அடிமைப்பட்ட நிலையில், அவர்களின் உரிமைகளுக்காக உலகில் முதன் முதல் சாத்வீகப் போராட்டத்தில் அதி உச்சமாக நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணா விரதத்தை மேற்கொண்டு அதன் இலக்கை அடைய முடியாமல் உயிர் துறந்த திலீபன் உலக வரலாற்றில் அகிம்சைப் போராட்ட தியாகிகளில் முதன்மையானவன்.

தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று!....

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது!  திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள் மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம்.
  
மாறன், ராஜன், தேவர், நேரு,நவீனன், மாத்தையா, திலீபனின் அண்ணன் ,இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன். 

கும்மிருட்டில் என்ன செய்வ தென்று தெரியாமல். 'நவீனன்......" என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் 'ஜில்' லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது. மனம் 'பட பட' வென்று  அடிக்கத் தொடங்கியது...

மீண்டும் 'நவீனன்" என்று அழைத்தேன். நவீனன் எழும்பி விட்டான். ஐந்து நிமிடங்களில் மேடயில் ஒரு பெரய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது. மெழுகு வர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது. ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்து விட்டது. பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய  விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது...

திலீபனின் நிலை எல்லையக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது. அதனால், என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை.... மிகவும் மெல்லியதாக அடிக்கிறது.... உடேன ,ரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன். அது மிகவும் குறைவாக இருக்கிறது...  50ஃ? என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தைன மணித்தியாலங்கள் உயிர் வாழ முடி
யும் என்பது எனக்குத் தெரியும். உலகேம தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது.

திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. 'வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணர் கூட பல வந்தமாகேவா, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. 

அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாது விட்டால் நான் இறக்கும் வரையில் எனக்கு எந்த விதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி... சுய நினைவில்லை என்றாலும் சரி...., அதுக்குச் சம்மதிக்கிறேன் என்று சத்தியம் செய்து தாருங்கோ..." என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர். 

அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக அவரின் சத்தியத்தை மீறி எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? நான் எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனித நேயத்தயும் - அதன் தார்ப்பரியங்கைளயும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையத் திலீபன் விஸயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகைளக் கட்டிப் போட்டது எது?... எது? ஆம் 'சத்தியம்!" என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தான் திலீபன், 'அகிம்சை" என்ற நான்கு எழுத்துக்கைளக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான்.

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதைலப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், 'கட்டுப்பாடு" என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே ' பலி.. கொடுத்தக் கொண்டிருந்தேன்...

எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம் ஆனால்...  

முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகேவ திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான். உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பைத என் கண்களால் பார்க்கேவண்டிய நிலை ஏற்பட்டைமக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதைனப்பட்டேன். 

ஆனால், என்ன செய்ய முடியும்? 265 மணித்தியாலங்கள் தனது சாகும்வைரயிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கொண்ட கொள்கையில் இருந்து விலகாமல் நடாத்தி முடித்த வீரச்சாவடைந்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09.1987) 10.48 மணியளவில், எம்மை எல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டு விட்டுத் தான் மட்டும் போய்விட்டான். 

வீரவணக்கம்

ஆம்!

தமிழர்தம் விளக்கு அணைந்து விட்டது! அணைந்தே விட்டது! டொக்ரர் சிவகுமார் அவ ர்கள், திலீபன் இறந்த பின் அவைரப் பரிசோதைன செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடக்கி விட்டனர். 

எங்கும் அழுகைச் சத்தம்.... விம்மல் ஒலி... சோக இசை.... வானேம இடிந்து விட்டதைப் போன்ற  பதட்டமான நிலை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு! அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

காலை 11 மணிக்கு 'என்பார்ம்" செய்வதற்காக, அவரது உடைல யாழ். வைத்தியக் கல்லுரிக்கு எடுத்துச் சென்றோம். பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த அதே மேடைக்கு முன்பாக அவரின் வித்துடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

விடுதைலப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் - கறுப்பும் கலந்த ,ராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, 'லெப்டினன்ட் கேணல்" என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும். ஆனால்,என்ன செய்ய முடியும்? அவரைப்  படுக்க வைத்திருந்த பேழையை, விடுதைலப் புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. 

தந்தை, சகோதரங்கள்,உறவினர்கள் ஆகியோர் உடைல வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும்,ஓய்வு பெற்ற ஆசிரியருமான,திரு. இராசையா அவர்கள் " ஓ..." என்று அலறியவாறு அவர் உடல் மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகைளப் போல், குலுங்கிக், குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது. 

பொதுமக்கள் மணிக் கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர். ஈரோஸ் இயக்கத் தைலவர் திரு. வே.பாலகுமார் அவர்களும், தமிழகத்திலிருந்து வருகைதந்த தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், ஐயா, கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

வீரவணக்கம்

தலைவர் பிரபாகரன்,சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நேடசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர். 

நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் (தமிழ்ச்செல்வன்) போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர். திலீபனின் தியாகப் பயணத்தில் 12நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்று வந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தைன நாட்கள் தேவையோ நானறியேன். 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை.  அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை......

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்- தியாகி திலீபன் 

தொகுப்பு -மு.வே.யோ.வாஞ்சிநாதன் 
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
கேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள் (25.09.2018)
திலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார் (25.09.2018)
இந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை? காணொளிகள் இணைப்பு (25.09.2018)
24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று. (24.09.2018)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின்  9ம்  நாள் இன்று. (23.09.2018)
22ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின் 8ம்  நாள் இன்று.. (22.09.2018)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31 ஆம் ஆண்டின்  7ம்  நாள் இன்று..  (21.09.2018)
தமிழீழத்தில் கொண்ட உறுதியால்! இன்னமும் மயங்காமல் இருக்கிறீர்கள்! (20.09.2018)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் ஆறாம்  நாள் இன்று..  (20.09.2018)
தியாகி திலீபனின் ஈழ விடுதலைப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் ஐந்தாம் நாள் இன்று! காணொளி இணைப்பு (19.09.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan